கோடை காலத்தில் எல்லோருக்கும் வரும் பிரச்சனை... !

கோடை காலத்தில் அதன் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.

கோடை காலம் வந்து விட்டாலே  பலரும் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை குளிப்பார்கள். பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்று தான். ஆனால் கோடை காலத்தில் அதன் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.

வியர்ப்பது என்பது ஒரு இயற்கை செயல் என்பதால், அதனை தடுத்து நிறுத்த முடியாது. வியர்வை வெளியேறாமல் இருந்தாலும், அது உடலுக்கு கெடுதலைத்தான் விளைவிக்கும்.அடிக்கும் வெயிலுக்கும் வியர்வைக்கும் பயந்து, குளிர்சாதன அறையிலேயே முடங்கிக் கிடப்பவர்களும் இருக்கிறார்கள். வியர்வையின் அளவை வைத்துத்தான் நமது உடல் வெப்பநிலையையே கணக்கிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. சரி வியர்வை தொல்லை இனி இல்லை. கவலையை விடுங்க  இத ஃபோலோ பண்ணுங்க,,

 

1. குளித்த பின்பு, சிறிதளவு பேக்கிங் சோடாவை எடுத்து அக்குளில் தெளித்துக் கொண்டால், வியர்வை நாற்றம் வெளிவராமல் தடுக்க முடியும்.

2. அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும்

3. தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம்.

4. நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும். வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும்.

5. உங்கள் அக்குளில் உள்ள முடியை நீக்கி சுத்தமாக வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும். அதனை ஷேவிங் அல்லது வேக்ஸிங் மூலமாக நீக்கலாம்

6. உடைகள் மட்டுமின்றி, உள்ளாடைகளும் காட்டனாக இருக்க வேண்டியது  அவசியம்.

7. துவைக்காத துணி அல்லது நோய்க்கிருமி பாதித்த துணிகளை அணிந்தாலும் அக்குளில் வாடை அடிக்கலாம். இவ்வகை துணிகளை அணிவதால் உங்கள் அக்குளில் இருந்து வெளிப்படும் வியர்வையில் நாற்றம் அடிக்கும். அதனால் உங்கள் துணிகளை நல்லதொரு ஆண்டி-பாக்டீரியா டிடர்ஜெண்டை பயன்படுத்தி ஒழுங்காக துவையுங்கள்.

8. வியர்வை துர்நாற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணம், நம்முடைய உணவு முறையாகும். பூண்டு, மசாலா உணவுப்பொருட்கள், அளவுக்கதிமான அசைவ உணவு போன்றவைகள் உடல் வியர்வையில் நாற்றத்தை ஏற்படுத்தும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close