சுடுதண்ணீர் அல்லது இளஞ்சூடான தண்ணீர் குடிப்பதால் நாள் முழுவதும் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சுகாதார மற்றும் உடற்பயிற்சி நிபுணர்கள் சுடுதண்ணீர் குடிப்பது உடல்நலத்திற்கும், உடலை கட்டுக்கோப்பாக பேணுவதற்கும் சிறந்தது என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால், வெயில் காலத்தில் இளஞ்சூடான தண்ணீர் அருந்துவது தாகத்தை கட்டுப்படுத்தாது. போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லையெனில், அது நீரிழப்பிற்கு இட்டுச்செல்லும். சிறுகுடல் நம் உணவு மற்றும் தண்ணீர் மூலம் உட்கொள்ளும் அனைத்து தண்ணீரையும் எடுத்துக்கொள்ளும். தண்ணீர் குடிப்பது நாம் உட்கொள்ளும் உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. பிரிட்ஜில் வைத்து குளிர்விக்கப்பட்ட தண்ணீர் உடலுக்கு கேடு விளைவிக்கிறது. தண்ணீர் குடிப்பது நல்ல ஜீரணத்திற்கு உதவி, மலச்சிக்கலைப்போக்குகிறது.
சுடுதண்ணீர் அல்லது இளஞ்சூடான தண்ணீர் குடிப்பதால் நாள் முழுவதும் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
ரத்த குழாய்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தசைகளுக்கு ஓய்வளித்து, வலிகளை குறைக்கிறது. உங்களுக்கு தசைகளில் புண் அல்லது வலி இருந்தால், சுடுதண்ணீர் குடிப்பது உங்களுக்கு உதவும்.
நடுத்தர வயது மற்றும் வயதானவர்களிடம் தண்ணீர் குடிப்பது எடையை குறைப்பதற்கு உதவுமா என்ற தலைப்பில் நடத்தப்பட்டு, 2003ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வில், குளிர்ந்த நீரைவிட சுடுதண்ணீர் குடிப்பது எடையை குறைப்பதற்கு நன்றாக உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சாப்பிடுவதற்கு முன் அரை லிட்டம் சுடு தண்ணீர் குடிப்பது, உடலில் வளர்சிதை மாற்றத்தை 30 சதவீதம் அதிகரிக்கச்செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சாதாரண காய்ச்சல் மற்றும் சளியை எதிர்த்து சுடுதண்ணீர் போராடுகிறது. சைனசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்கிறது.
ஆயுர்வேத சிகிச்சை முறையை பொறுத்தவரை, சுடுதண்ணீர் குடிப்பது பல வழிகளில் நம் உடலுக்கு உதவுகிறது என்று பெங்களூர் போர்டிஸ் மருத்துவமனையின் தலைமை உணவியலாளர் ஷாலினி அரவிந்த் கூறுகிறார்.
உணவு செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. மூக்கு அடைத்திருந்தால், சளியை இளகுவாக்கி, வெளியேற்ற உதவுகிறது.
காய்ச்சல் நேரங்கள் மற்றும் பருவ காலங்கள் மாறும்போது சுடுதண்ணீர் அதிகளவு பயன்படுகிறது.
திடீரென சுடுதண்ணீர் குடிக்க, அதுவும் வெயில் காலங்களில் அதற்கு மாறுவதற்கு சிலருக்கு கடினமாக இருக்கும். வழக்கமாக ஆண்டு முழுவதும் சுடுதண்ணீர் குடிப்பவர்களுக்கு அது எளிதாக இருக்கும்.
தமிழில்: R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil