Advertisment

தயிர், கற்றாழை, சந்தனம்- வெயிலில் மந்தமான முகத்துக்கு சூப்பர் சம்மர் ஃபேஸ் பேக்

ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமம் குளிர்ச்சியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

author-image
WebDesk
New Update
Skin Slugging

Summer Face Pack

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வெளியே வெயில் உக்கிரமாக வாட்டிக் கொண்டிருக்கிறது. இது தோல் எரிச்சல், வியர்வை, அரிப்பு, டேனிங் மற்றும் பிற சிக்கல்களைக் கொண்டுவருகிறது. கோடையில், உங்கள் சருமத்தை குளிர்ச்சியாகவும், வியர்வை இல்லாததாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பது முக்கியம்.

Advertisment

ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமம் குளிர்ச்சியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

தயிர், கற்றாழை ஃபேஸ் மாஸ்க்          

Aloe vera gel

சூரிய ஒளி உங்கள் முகத்தில் உள்ள பொலிவை நீக்கி மந்தமாக க்கும்.

இருப்பினும், தயிர் மற்றும் கற்றாழை உங்கள் முகத்தின் புத்துணர்ச்சியையும் குளிர்ச்சியையும் பராமரிக்க உதவும். ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் 3 ஸ்பூன் கற்றாழை ஜெல் கலக்கவும். கலவையை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் விடவும். பின்னர் உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும், வித்தியாசத்தை கவனிக்கவும்.

தக்காளி, தேன் ஃபேஸ் மாஸ்க்

ஒரு கிண்ணத்தில் 1 நடுத்தர அளவிலான தக்காளி பேஸ்ட் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடம் விட்டு தண்ணீரில் கழுவவும்.

தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகள் உள்ளன, அவை எண்ணெய் மற்றும் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு சிறந்தவை. மறுபுறம், தக்காளி, ஆன்டி டேனிங் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு பொருட்களின் கலவையும் கோடையில் முகத்திற்கு ஏற்றது.

ரோஸ் வாட்டர், சந்தனம்

Homemade Rose Water

சந்தனம் கோடையில் முக எரிச்சல் மற்றும் பருக்களுக்கு ஒரு பழங்கால மருந்து. இது சருமத்திற்கு பொலிவையும் தருகிறது. ரோஸ் வாட்டர் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்கி, சருமத்தை ஈரப்பதமாக்கி, முகத்தின் பொலிவை அதிகரிக்கிறது.

2 டேபிள்ஸ்பூன் தூய சந்தனப் பொடியை ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் செய்யவும். குளிர்ச்சியாகவும், மந்தமான சருமத்தை புதுப்பிக்கவும் பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவவும். பேஸ்ட் காய்ந்த பிறகு, அதை சாதாரண நீரில் கழுவவும்.

தர்பூசணி, தயிர்

Curd

தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது, இது முகத்திற்கு சிறந்தது. இது சருமத்திற்கு பளபளப்பைத் தருகிறது மற்றும் ஈரப்பதத்துடன் வைக்கிறது. எண்ணெய் பசை சருமத்திற்கு இது ஒரு நல்ல தீர்வு.

ஒரு பாத்திரத்தில் துருவிய தர்பூசணி மற்றும் 1 தேக்கரண்டி தயிர் கலக்கவும்.

ஒரு பிரஷை பயன்படுத்தி கலவையை உங்கள் முகத்தில் தடவவும். வெயிலில் பாதித்த பகுதிகளிலும் இதைப் பயன்படுத்தலாம். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும். இந்த ஃபேஸ் மாஸ்க் சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட முகத்துக்கு நிவாரணம் அளிக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment