கோடை வெயிலால் முகம் கருமையாகி விட்டதா? கவலையே வேண்டாம்; இந்த ஹோம்மேட் ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க!
வெயில் காலத்தால் முகத்தில் ஏற்பட்ட கருமையை எவ்வாறு இயற்கையான முறையில் போக்குவது என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக ஹோம்மேட் ஃபேஸ்பேக்கை நாமே தயாரித்து பயன்படுத்த முடியும்.
வெயில் காலத்தால் முகத்தில் ஏற்பட்ட கருமையை எவ்வாறு இயற்கையான முறையில் போக்குவது என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக ஹோம்மேட் ஃபேஸ்பேக்கை நாமே தயாரித்து பயன்படுத்த முடியும்.
கோடை வெயிலில் அதிகமாக வெளியே செல்வதால் எத்தனையோ பாதிப்புகள் வரக் கூடும். குறிப்பாக, முகம் முழுவதும் கருமையாக மாறி விடும். அந்த வகையில் வெயிலின் தாக்கம் நம் சருமத்தில் தான் முதலில் தெரியும்.
Advertisment
அந்த வகையில் வெயில் காலத்தின் போது நம் சருமத்தை சீராக பராமரிக்க வேண்டும். இதற்காக வெளியே செல்லாமல் இருப்பதும் சாத்தியம் கிடையாது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் என நம் அன்றாட பணிகளுக்காக நாள்தோறும் வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தம் எல்லோருக்கும் இருக்கிறது.
இது தவிர மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு கூடுதல் சிரமமாக இருக்கும். இவ்வாறு வெயிலில் சென்று முகம் கருமையாக மாறினால், அதனை போக்க பியூட்டி பார்லருக்கு செல்லும் பழக்கம் சிலருக்கு இருக்கும்.
ஆனால், அனைவராலும் பியூட்டி பார்லருக்கு செல்ல முடியாது. இது தவிர முகத்திற்கு பயன்படுத்தப்படும் ஃபேஸ் கிரீம், சீரம் போன்ற பொருட்களில் இரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் அதில் இருந்து ஒவ்வாமை ஏற்படுமோ என்ற தயக்கமும் சிலருக்கு இருக்கும்.
Advertisment
Advertisements
அதன்படி, வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி வெயிலின் காரணமாக முகத்தில் ஏற்பட்ட கருமையை நாம் போக்க முடியும். அதற்கான செயல்முறை விளக்கத்தை தற்போது பார்க்கலாம். இதற்காக தக்காளியும், கடலை மாவும் இருந்தால் போதுமானது.
நன்கு பழுத்த தக்காளியை பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதில் ஒரு பாதியை மட்டும் எடுத்து சாறு பிழிய வெண்டும். இந்த தக்காளி சாறை இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் சேர்த்து பசை பதத்திற்கு கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஃபேஸ்பேக் தயாராகி விடும்.
இதனை முகத்தில் தேய்த்து விட்டு சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு செய்தால் நம் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி பொலிவாக காட்சியளிக்கும்.
நன்றி - Dhanancheyan_yugam Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.