/indian-express-tamil/media/media_files/ehG0KLk73sAleTBwkcVh.jpg)
Summer Hair care
வெயில் காலம் தொடங்கிவிட்டது! பருவம் மாறும்போது பலருக்கும் தலைமுடி மற்றும் சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக, கோடை காலத்தில் முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாகும். உங்கள் தலைமுடியில் ஏற்படும் இந்த பருவகால தொல்லைகளைத் தவிர்க்க, இதோ நீங்களே வீட்டில் எளிதாக செய்யக்கூடிய ஒரு இயற்கையான ஷாம்பு.
இந்த ஹோம்மேட் ஷாம்பு முடி உதிர்தல் மற்றும் இதர முடி பிரச்சனைகளை கவனித்துக்கொள்ள உதவும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான முடியை நீங்கள் பெறலாம்.
எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:
பேக்கிங் சோடா - 2 டீஸ்பூன்
டீ ட்ரீ ஆயில் - சில துளிகள்
ஆப்பிள் சைடர் வினிகர் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 6 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு சுத்தமான கிண்ணத்தில் பேக்கிங் சோடா, டீ ட்ரீ ஆயில் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகரை ஒன்றாக சேர்க்கவும்.
அதனுடன் தண்ணீரையும் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் போன்ற பதத்திற்கு கொண்டு வரவும்.
உங்கள் தலைமுடியை லேசாக ஈரப்படுத்திக் கொள்ளவும்.
தயாரித்த பேஸ்ட்டை நேரடியாக உங்கள் உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் வழக்கமான தண்ணீரில் நன்றாக அலசவும்.
இந்த ஷாம்புவால் கிடைக்கும் நன்மைகள்:
பேக்கிங் சோடா எண்ணெய் பசை உள்ள கூந்தலுக்கு மிகவும் நல்லது. இது உச்சந்தலையை சுத்தப்படுத்தி, ஹேர் ஃபாலிக்கிள்ஸை திறக்க உதவுகிறது.
உங்கள் முடியின் தன்மை மற்றும் முடி உதிர்வின் அளவைப் பொறுத்து, இந்த ஷாம்புவை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் உச்சந்தலையில் உள்ள அமில-கார சமநிலையை சீராக்க உதவுகிறது.
இனி வெயில் காலத்திலும் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் ஜொலிக்கும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.