வெப்பம் காரணமாக முடி ஸ்டிக்கி மற்றும் கிரீஸியாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை. கடுமையான சூரிய ஒளியால், அழுக்கு மற்றும் வியர்வை உச்சந்தலையில் குவிகிறது. இதனால் கூந்தல் கிரீஸியாகவும் அழுக்காகவும் காணப்படும்.
இந்த காரணங்களால், கோடையில் முடியை பராமரிப்பது இன்னும் முக்கியமானது. கோடையில் பொடுகு தொல்லை வராது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. எண்ணெய் நிறைந்த உச்சந்தலையில் ஈரமான பொடுகு மற்றும் அரிப்பு ஏற்படலாம், இது முடி உடைவதற்கு வழிவகுக்கிறது.
இருப்பினும், இந்த வைத்தியம் கோடையிலும் முடி தொடர்பான பல பிரச்சனைகளை நீக்க உதவும்.
நெல்லி, பால் ஹேர் மாஸ்க்
நெல்லியில் உள்ள இயற்கையான பண்புகள், உங்கள் உச்சந்தலையில் ஈரப்பதம் மற்றும் ஊட்டமளிக்க உதவுகிறது, இது வறட்சி, அரிப்பு மற்றும் பொடுகு ஆகியவற்றைக் குறைக்கிறது.
இது வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இது முடி வளர்ச்சியைத் தூண்டும், உங்கள் தலைமுடியை வேர்களில் இருந்து வலிமையாக்கும், எனவே இது உடைந்து அல்லது பிளவுபடுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
எப்படி பயன்படுத்துவது?
2-3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை போதுமான அளவு பச்சை பாலுடன் கலந்து கெட்டியான பேஸ்ட் செய்யவும். அரை டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெயையும் சேர்த்து கலக்கலாம்.
பேஸ்டை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவி மூடி வைக்கவும். 40 நிமிடங்கள் விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீர் மற்றும் ஹெர்பல் ஷாம்பூவுடன் கழுவவும்.
சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்தவும்.
புதினா ஹேர் ரின்ஸ்
புதினா குளிர்ச்சி மற்றும் இனிமையான விளைவைக் கொண்டுள்ளது, இது உச்சந்தலையில் எரிச்சல், அரிப்பு மற்றும் வீக்கத்தை எளிதாக்க உதவுகிறது. இது உச்சந்தலையில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எப்படி அப்ளை செய்வது?
ஒரு கைப்பிடி புதிய புதினா இலைகளை தண்ணீரில் சுமார் 15-20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். புதினா தண்ணீரை ஆறவிடவும், பின்னர் இலைகளை வடிகட்டவும்.
நீங்கள் ஷாம்பு போட்ட பிறகு, புதினா தண்ணீரை இறுதியாக கழுவ பயன்படுத்தவும். உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் அதை மசாஜ் செய்யவும். உங்கள் முடி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“