வெப்பம் காரணமாக முடி பிசுபிசுவென்று கீரிஸியாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை. வலுவான சூரிய ஒளி, அழுக்கு மற்றும் வியர்வை உச்சந்தலையில் குவிகிறது. இதனால் கூந்தல் கீரிஸி ஆகவும், அழுக்காகவும் காணப்படும். இந்த காரணங்களால், கோடையில் முடியை பராமரிப்பது இன்னும் முக்கியமானது. கோடையில் பொடுகு தொல்லை வராது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
எண்ணெய் நிறைந்த உச்சந்தலையில், ஈரமான பொடுகு மற்றும் அரிப்பு ஏற்படலாம், இது முடி உடைவதற்கு வழிவகுக்கிறது
இருப்பினும், சமையலறையில் இருக்கும் சில பொருட்களின் உதவியுடன், கோடையிலும் ஆரோக்கியமான முடியைப் பெறலாம். இந்த வைத்தியம் முடி தொடர்பான பல பிரச்சனைகளை நீக்க உதவும்.
துளசி, தயிர் மற்றும் தேன்
துளசியில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது உச்சந்தலையை சுத்தப்படுத்துகிறது மற்றும் எந்த தொற்றுநோயையும் தடுக்கிறது. தயிர் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது, இது உச்சந்தலையில் ஹைட்ரேட் செய்ய உதவுகிறது.
இதனால் அரிப்பு பிரச்சனை நீங்கும். தேன் உச்சந்தலையை வறண்டு போக அனுமதிக்காது மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்.
எப்படி செய்வது?
இதற்கு ஒரு பாத்திரத்தில் 5-6 துளசி இலைகளை நசுக்கவும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து அரை டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த ஹேர் மாஸ்க்கை உங்கள் தலைமுடியில் தடவி 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.
30 நிமிடங்களுக்குப் பிறகு, உச்சந்தலையில் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முடியை கழுவவும்.
வாரம் இருமுறை இதை செய்து வித்தியாசத்தை பாருங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“