வெளியே வெயில் உக்கிரமாக கொதித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளும் வெப்பத்தால் எரிகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், உங்களிடம் ஏர் கண்டிஷனிங் இல்லாவிட்டாலும் கூட வெயிலில் இருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன.
இந்த கொளுத்தும் வெயிலில் உங்களை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் வைத்திருக்க, வியர்வை இல்லாமல் வெப்ப அலையில் இருந்து தப்பிக்க உதவும் 5 உதவிக் குறிப்புகள் இங்கே…
குஸ் கர்டெய்ன்ஸ்
இந்திய வெப்ப அலை ஆராய்ச்சியாளர் குல்ரேஸ் ஷா அசார், குஸ் கர்டெய்ன்ஸ் வெப்பத்தை குறைக்க உதவும், என்றார்.
குஸ் என்பது புல்லில் செய்யப்பட்ட பாய் போன்ற திரைச்சீலைகள், இதை கதவுகள் மற்றும் ஜன்னல்களில் தொங்கவிடலாம். அடிக்கடி இதில் ஸ்பிரே பாட்டில் கொண்டு தண்ணீர் தெளித்தால், வீடு குளிர்ச்சியாக இருக்கும்.
மேலும் காட்டன் கர்டெய்ன்ஸ் கோடையில் சிறந்ததாக கருதப்படுகின்றன. கோடை காலத்தில் வீட்டில் இளஞ்சிவப்பு, நீலம், வெள்ளை போன்ற பிரகாசமான வண்ண திரைச்சீலைகளை பயன்படுத்தவும்.
காற்றோட்டம்
வீட்டிற்குள் எப்போதும் காற்றோட்டத்தை பராமரிப்பது முக்கியம். இதற்காக, வீட்டின் எதிர் பக்கங்களில் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறக்கவும். இதனால் குளிர்ந்த காற்று வீட்டிற்குள் நுழைந்து, வெப்பக் காற்று வெளியேறும்.
உங்கள் இடத்திற்கு மிகவும் பயனுள்ள காற்றோட்டத்தைக் கண்டறிய வெவ்வேறு காம்பினேஷன்களுடன் பரிசோதனை செய்யுங்கள்.
எக்ஸாஸ்ட் ஃபேன்
சில சமயங்களில் வீட்டிற்குள் உணவு சமைப்பதும் வெப்பத்தை உண்டாக்கும். எனவே எப்பொழுதும் எக்ஸாஸ்ட் ஃபேனை இயக்க வேண்டும். இது வீட்டிலிருந்து வெப்பக் காற்றை வெளியேற்றி, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கும்..
கூலிங் சொல்யூஷன்ஸ்
உங்கள் வீட்டு மாடியில், கண்டிப்பாக மாலையில் தண்ணீர் தெளிக்கவும். இது சூடான கூரையை குளிர்விக்கும், மேலும் மின்விசிறி இயக்கும் போது, சூடான காற்றுக்கு பதிலாக குளிர் காற்று வரும். இது இரவில் நிம்மதியாக தூங்க உதவும்.
மேலும், ஒரு விரிந்த பாத்திரத்தில் பனி மற்றும் தண்ணீரை நிரப்பி, புத்துணர்ச்சியூட்டும் காற்றுக்காக விசிறியின் முன் வைக்கவும். மழைக்காலத்தில் வீட்டுக்குள் ஈரத் துணிகளை காயப் போடுவதை, வெயில் காலத்திலும் செய்யலாம். இந்த ஈரமான துணிகள் ஆவியாதல் மூலம் குளிரூட்டும் விளைவை உருவாக்கலாம்.
உங்கள் வீடு தாங்கமுடியாத அளவு சூடாக இருந்தால், பொது நூலகம், ஷாப்பிங் மால் அல்லது ஏர் கண்டிஷனிங் கொண்ட இடங்களுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுங்கள்.
வீட்டுத் தாவரங்கள்
சில வீட்டு தாவரங்களில் முதலீடு செய்யுங்கள். தாவரங்கள் நீராவியை வெளியேற்றும் செயல்முறையின் மூலம் காற்றை குளிர்விக்க உதவும்.
கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க, பால்கனியில் முடிந்தவரை செடிகளை வளர்க்கவும். இதனால் காற்று குளிர்ச்சியாகவும் தூய்மையாகவும் இருக்கும். வேண்டுமானால் வீட்டுக்குள்ளும் செடிகளை வளர்க்கலாம். இது குளிர்ச்சியான உணர்வை தரும்
இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், கடுமையான வெப்பத்தின் போது கூட நீங்கள் குளிர்ச்சியாகவும் வசதியாகவும் இருக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“