/indian-express-tamil/media/media_files/2025/04/29/nnr9xewoySoHwUwfA2x8.jpg)
Cool home Tips
கோடை நெருங்கிவிட்டால் போதும், இதுவரை வீட்டில் ஏசி மாட்டாதவர்கள்கூட ஏசி-யை வாங்கி மாட்டிவிடுவார்கள். சம்மர் சீஸனில் ஏசியை மட்டுமே நம்பி இருப்பது உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கும். அத்துடன் உங்கள் பட்ஜெட்டுக்கும்…
கோடைக் காலத்தில் வீட்டுக்குள் காற்று வரட்டும் என ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்தால் வீட்டுக்குள் அனல்காற்று தான் வரும். பகலில் கூட சமாளித்துவிடலாம். ஆனால் இரவில் வீட்டுக்குள் ஃபேன் போட்டால் கூட அனல் காற்று தான் வருகிறது.
இங்கு ஏ.சி. இல்லாமலே உங்கள் வீட்டை எப்படி குளிர்ச்சியாக வைப்பது என்று பாருங்கள். இதனால் நிறைய மின்சார செலவு மிச்சம் ஆகும்.
இதுதவிர அனல்காற்று வீட்டினுள் வராதவாறு சற்று வெளிர் நிற காட்டன் கர்டெய்ன் பயன்படுத்துங்கள். வெயில் காலங்களுக்கு ஏற்ற பெயின்ட்கள் இன்று கிடைக்கின்றன. முக்கியமாக மேற்கூரை மற்றும் பக்கச்சுவர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தும் வண்ணங்கள் ஐவரி, பிங்க், வெளிர் பச்சையாக இருந்தால், அது வீட்டுக்குள் குளிர்ந்த தன்மையை உண்டாக்கும்.
வீட்டின் மாடியில் நீரில் நனைத்த கோணிகளைப் பரப்பிவைக்கலாம். இதன்மூலம் வீட்டின் உள்ளே சூடு இறங்குவது குறையும். அத்துடன், வீட்டின் மேல் மாடியில் தென்னங்கீற்றுகளால் கோடைக்காலம் முடியும் வரை நிரந்தரமாக பந்தல்போட்டு வைக்கலாம். இப்படிச் செய்தால், மாடியின் தரையைக்கூட வெயிலால் தொட முடியாது. உங்கள் வீடும் எப்போதும் குளுமையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us