இந்த வெயில் காலத்தில் இத மட்டும் கம்மியாக சாப்பிடுங்க... உடல் குளு குளுன்னு இருக்கும்: டாக்டர் வரலட்சுமி

உடல் வெப்பம் அதிகரிக்கும்போது, இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில், கிருமிகள் எளிதாக நம்மைத் தாக்கி அம்மை போன்ற நோய்களை உண்டாக்கலாம்.

உடல் வெப்பம் அதிகரிக்கும்போது, இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில், கிருமிகள் எளிதாக நம்மைத் தாக்கி அம்மை போன்ற நோய்களை உண்டாக்கலாம்.

author-image
WebDesk
New Update
Chickenpox home remedy

Chickenpox home remedy

கோடை காலம் வந்துவிட்டாலே வெப்பத்தின் தாக்கம் நம் உடலில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. இந்த வெப்பமான சூழ்நிலையில் கிருமிகளின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். உடல் வெப்பம் அதிகரிக்கும்போது, இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில், கிருமிகள் எளிதாக நம்மைத் தாக்கி அம்மை போன்ற நோய்களை உண்டாக்கலாம்.

Advertisment

எனவே, கோடை காலத்தில் நாம் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தவிர்க்க வேண்டிய உணவுகளைத் தவிர்த்து, உடல் குளிர்ச்சியைத் தரும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வது நல்லது.

அம்மை நோய் வராமல் தடுக்கவும், வந்தபின் அதன் தீவிரத்தைக் குறைக்கவும் சில இயற்கை முறைகள் உள்ளன.

Advertisment
Advertisements

அம்மை நோய் வரும்போது அதிக மருந்துகளை உட்கொள்ளாமல், இயற்கையான உணவு முறைகளையும், வைத்திய முறைகளையும் பின்பற்றினால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படாமல், நோய் தானாகவே குணமாகும்.

அம்மை நோய் வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடல் இயக்கத்திலும் சில சிரமங்கள் இருக்கும்.

அதனால், அதிக எண்ணெய் சேர்த்து தாளித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தாளித்த உணவுகள் கல்லீரலின் செயல்பாட்டை அதிகமாக்கி, அதற்கு சிரமத்தை ஏற்படுத்தும். புளி, உப்பு, காரம் மற்றும் சூடு தரக்கூடிய உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பப்பாளி, அன்னாசி, எள், கொள்ளு போன்ற ஜீரணிக்க கடினமான உணவுகளையும், அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

எளிதில் ஜீரணமாகக்கூடிய அரிசி கஞ்சி, ராகி கஞ்சி, இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும். நீர்த்தன்மை உள்ள உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும். அதனால் தான் கஞ்சி பரிந்துரைக்கப்படுகிறது. பானகம், இளநீர், மாதுளை ஜூஸ் போன்ற திரவ உணவுகளையும், மோர் போன்றவையும் பருகலாம்.

வேப்பிலை மற்றும் கற்றாழையை காற்று விசிறியாக பயன்படுத்தலாம். வெட்டிவேர் மற்றும் விளாமிச்சை வேர் போட்ட தண்ணீரை குடிக்கலாம். சீரகத்தை கொதிக்க வைத்த தண்ணீர் வயிற்றுக்கும் நல்லது, உடல் வெப்பத்தையும் அதிகரிக்காது. வயிற்றில் புண் உள்ளவர்களுக்கும் இது நல்லது. புளிப்பு, உப்பு மற்றும் காரம் ஆகிய சுவைகளை அறவே தவிர்க்க வேண்டும். உப்பை வேண்டுமானால் சிறிதளவு குறைத்துக்கொள்ளலாம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: