கடுமையான கோடை வெயில், தூசி மற்றும் மாசுபாடுகளுடன் சேர்ந்து, சருமத்தை மந்தமானதாகவும், எண்ணெய் பசையாகவும் மாற்றும். ஆனால் ரசாயனம் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதில் தீர்வு இல்லை.
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அனைவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது பின்பற்ற வேண்டிய எளிதான வழக்கத்தை நாங்கள் சொல்கிறோம். நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளில் பாராபென்ஸ் மற்றும் காமெடோஜெனிக் ரசாயனங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த கோடையில் எண்ணெய் சருமத்திற்கு குட்பை சொல்ல உதவும் இந்த எளிய தந்திரங்களை நீங்கள் பின்பற்றலாம்.
க்ளென்சிங்
உங்கள் முகத்தில் தயிர் தடவுவதன் மூலம் தொடங்கவும். 2 நிமிடம் சரியாக மசாஜ் செய்து 5 நிமிடம் அப்படியே வைக்கவும். உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி, ஒரு புதிய துண்டு கொண்டு உலர வைக்கவும். இதற்கு பிறகு சோப்பு பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
ஸ்க்ரப்பிங்
இரண்டாவது படியானது உங்கள் ஸ்கின் டோனை ஊட்டமளித்து சமப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமின்றி, உங்கள் சருமத்தில் இறந்த செல்கள் எஞ்சியிருக்கவில்லை என்பதையும் இது உறுதி செய்கிறது. தலா ஒரு தேக்கரண்டி தேன், தயிர் மற்றும் இன்ஸ்டன்ட் காபி தூள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவவும்.
நீங்கள் முகப்பரு உள்ளவராக இருந்தால், ஸ்க்ரப்பிங் செய்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது சருமத்திற்கு மேலும் தீங்கு விளைவிக்கும். இல்லையெனில், தொடர்ந்து 2 நிமிடங்கள் ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
ஃபேஸ் பேக்
ஒரு டீஸ்பூன் தேன், கடலை மாவு, தக்காளி சாறு மற்றும் தயிர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். ஒன்றாக கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்து போகும் வரை இருக்கட்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும், உங்கள் முகத்தை உலர்த்தி, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். நீங்கள் மற்ற ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க் ரெசிபிகளையும் முயற்சி செய்யலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நீரேற்றமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“