Advertisment

கொளுத்தும் கோடை வெயில்: சருமம் குளிர்ச்சியாக இந்த 3 ஃபேஸ் மாஸ்க் டிரை பண்ணுங்க

உங்கள் சருமம் குளிர்ச்சியாகவும், பளபளப்பாகவும் இருக்க நீங்களே வீட்டில் செய்யக் கூடிய ஃபேஸ் மாஸ்க் ரெசிபி இங்கே

author-image
WebDesk
New Update
Egg face mask

Summer Skin care

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கொளுத்தும் கோடை வெயில் எரிச்சல், வியர்வை, அரிப்பு, டேனிங் மற்றும் பிற சிக்கல்களைக் கொண்டு வருவதால் உங்கள் சருமத்தை குளிர்ச்சியாகவும், வியர்வை இல்லாததாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பது முக்கியம்.

Advertisment

உங்கள் சருமம் குளிர்ச்சியாகவும், பளபளப்பாகவும் இருக்க நீங்களே வீட்டில் செய்யக் கூடிய ஃபேஸ் மாஸ்க் ரெசிபி இங்கே

தயிர், கற்றாழை ஃபேஸ் மாஸ்க்

Aloe vera gel

சூரிய ஒளி உங்கள் முகத்தின் பொலிவை நீக்கி, மந்தமானதாக ஆக்கும். தயிர் மற்றும் கற்றாழை உங்கள் முகத்தின் புத்துணர்ச்சியையும் குளிர்ச்சியையும் பராமரிக்க உதவும்.

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் 3 ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து, உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் விடவும். பின்னர் உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும், வித்தியாசத்தை கவனிக்கவும்.

தக்காளி, தேன் ஃபேஸ் மாஸ்க்

ஒரு கிண்ணத்தில் 1 மீடியம் சைஸ் தக்காளி சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலக்கவும். அதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் விட்டு தண்ணீரில் கழுவவும்.

தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன, அவை எண்ணெய் மற்றும் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு சிறந்தவை. மறுபுறம், தக்காளி, ஆன்டி டேனிங் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த இரண்டும் கோடையில் முகத்திற்கு ஏற்றது.

தர்பூசணி, தயிர் ஃபேஸ் மாஸ்க்

watermelon

தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது, இது முகத்திற்கு சிறந்தது. இது சருமத்திற்கு பளபளப்பைத் தருகிறது மற்றும் ஈரப்பதத்துடன் வைக்கிறது. எண்ணெய் பசை சருமத்திற்கு இது ஒரு நல்ல தீர்வு.

ஒரு கிண்ணத்தில் துருவிய தர்பூசணி மற்றும் 1 டேபிள்ஸ்பூன் தயிர் கலக்கவும். ஒரு பிரஷை பயன்படுத்தி இதை உங்கள் முகத்தில் தடவவும். வெயிலில் எரிந்த பகுதிகளிலும் இதைப் பயன்படுத்தலாம். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும்.

இந்த ஃபேஸ் மாஸ்க் சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment