கோடைக் காலத்தில் வெளியில் செல்வதற்கு முன் சன்ஸ்கிரீன் அணிவது பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் இது வெயில், தோல் கருமையாகுதல் மற்றும் புற ஊதா கதிர்கள்(UV Rays) ஆகியவற்றிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
இது கவசமாக மட்டுமல்லாமல், சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். பலர் இதைப் புரிந்துகொண்டு தங்கள் சன்ஸ்கிரீனுடன் நட்பாக இருக்கிறார்கள்.
ஆனால், முகத்தில் லோஷனை எப்படி சரியாகப் பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியுமா?
பெரும்பாலான மக்கள் தங்கள் விரல் நுனியில் சிறிது சன்ஸ்கிரீனை எடுத்து, பின்னர் அவற்றை முகத்தில் தேய்க்கிறார்கள். ஆனால், இது தவறான முறை.
தோல் மருத்துவர் சு, சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கான சரியான முறையை பகிர்ந்து கொண்டார்.
வீடியோவில் காட்டியபடி நீங்கள் தாராளமாக, உங்கள் ஆள்காட்டி மற்றும் நடுவிரல்களில் லோஷனை எடுத்து, ஃபேஸ் மாஸ்க் போல முகம் முழுவதும் சமமாகப் பூச வேண்டும். பிறகு, சன்ஸ்கிரீன் தோல் மற்றும் கழுத்துப் பகுதியில் ஊடுருவும் வரை நிதானமாக மசாஜ் செய்ய வேண்டும்.
ஒருமணி நேரம் கழித்து சன்ஸ்கீரின் உங்கள் சருமத்தில் நன்கு செட் ஆகிவிடும். அதன்பிறகு நீங்கள் வெயில் பயமின்றி வெளியே செல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“