கோடை காலம் சருமத்தில் குறிப்பாக கடுமையானதாக இருக்கும், இது பல அபாயங்களையும் சவால்களையும் ஏற்படுத்துகிறது. சூரிய ஒளியின் அதிக வெளிப்பாடு வெயில், தடிப்புகள், டேனிங், முன்கூட்டிய முதுமை மற்றும் தோல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
Advertisment
எனவே, இந்த பொதுவான தோல் பராமரிப்பு கவலைகளை ஒருவர் எவ்வாறு நிவர்த்தி செய்து ஆரோக்கியமான சருமத்தை அடையலாம் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். தோல் மருத்துவர் டாக்டர் ஆஞ்சல் பந்த், சில பொதுவான கோடைகால தோல் நிலைகள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான வழிகளைப் பகிர்ந்து கொண்டார்..
ஹீட்ரேஷ்
ஹீட் ரேஷ், எக்ரைன் வியர்வை சுரப்பிகள் அல்லது குழாய்களின் அடைப்பு காரணமாக ஏற்படுகிறது. இது கோடையில் பொதுவானது மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள பகுதிகளில் நிகழ்கிறது.
* குளிர்ந்த நீர் குளியல்
*கலாமைன் லோஷன் (Calamine-based soothing lotion)
* சுத்தமான பருத்தி ஆடைகளை அணியுங்கள்
* கடுமையான அரிப்பு ஏற்பட்டால் தோல் மருத்துவரை அணுகவும்.
கூடுதலாக, தோல் மருத்துவர் ரிங்கி கபூர், ஹீட் ரேஷஸ் கட்டுப்படுத்த குளிர்ந்த நீரில் குளிக்குமாறு பரிந்துரைத்தார்.
தளர்வான பருத்தி ஆடைகளை அணிய முயற்சிக்கவும், நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்கவும், மேலும் ரசாயனங்கள் நிறைந்த பொருட்கள் அல்லது வெடிப்புகளை மோசமாக்கும் வாசனை திரவியங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
வெப்பமான, ஈரப்பதமான சூழல்கள் போன்ற அதிகப்படியான வியர்வையைத் தவிர்க்கவும். குளிரூட்டப்பட்ட அறையில் தங்கவும்.
ஹீட் ரேஷன் வராமல் தடுக்க தோலை முடிந்தவரை உலர்ந்த, குளிர்ச்சியாக மற்றும் சுத்தமாக வைத்திருக்கவும். சொறியை உண்டாக்கும் துளைகளைத் தடுக்கும் கிரீம்கள் மற்றும் களிம்புகளைத் தவிர்க்கவும். கம்பளி அல்லது நைலான் போன்ற உங்கள் சருமத்தை எரிச்சலூட்டும் துணிகளைத் தவிர்க்கவும் என்று டாக்டர் கபூர் கூறினார்.
சன்பர்ன் (Sunburn)
டாக்டர் பாந்தின் கூற்றுப்படி, அதிக தீவிரம் கொண்ட புற ஊதா கதிர்வீச்சுக்கு தோல் வெளிப்படும் போது Sunburn ஏற்படுகிறது. அதை நிர்வகிப்பதற்கான வழிகளை பரிந்துரைத்தார்.
*அலோவேரா ஜெல்லைத் தடவவும்
*ஐஸை நேரடியாக தேய்க்க வேண்டாம், இது காயத்தை மோசமாக்கும்
*அந்தப் பகுதியில் வெந்நீர் படுவதை தவிர்க்கவும்
* ஒரு நாளைக்கு 3 முறை வாஸ்லின், செட்டாஃபில் மூலம் மாய்ஸ்சரைஸ் செய்யவும்.
* சூரிய ஒளியில் இருந்து அந்தப் பகுதியைப் பாதுகாக்கவும்
Sunburns தவிர்க்க, தினமும் குறைந்தது இரண்டு முறையாவது SPF 50 சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துமாறு டாக்டர் கபூர் பரிந்துரைத்தார்.
முழு கையும் மூடும் தளர்வான ஆடைகள், தொப்பிகள் மற்றும் சன்கிளாஸ்களை அணிந்து, வெயிலைத் தவிர்க்க முகத்தை ஒரு ஸ்கார்ஃப் கொண்டு மூடவும்.
மதியம் 12:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெயில் அதிகமாக இருக்கும்போது வெளியே செல்வதைத் தவிர்க்கலாம். உதடுகள் வெயிலில் இருந்து எரிவதைத் தடுக்க SPF லிப் பாமைப் பயன்படுத்துங்கள், என்று அவர் கூறினார்.
டேனிங்
மறுபுறம், டேனிங், அதிகப்படியான சூரிய ஒளியால் ஏற்படுகிறது, இது மெலனோசைட் செல்களை, அதிக பிக்மென்ட் மெலனின் தயாரிக்க தூண்டுகிறது. டாக்டர் பந்த் இந்த நடவடிக்கைகளை பின்பற்ற பரிந்துரைத்தார்.
சூரியனிடமிருந்து பாதுகாப்பு மிக முக்கியமானது. வழக்கமான சன்ஸ்கிரீன் பயன்பாடு, பகல்நேரத்தில் வெயிலில் செல்வதை தவிர்க்கவும்.
மாய்ஸ்சரைசர்களுடன் கூடிய மென்மையான கெமிக்கல் எக்ஸ்ஃபோலியண்ட்ஸ் உதவும்
*கிளைகோலிக் ஆசிட் சார்ந்த க்ரீம்கள் டேனிங்கை குறைக்க உதவுகிறது.
அவ்வப்போது எக்ஸ்ஃபோலியேடிங் செய்வது உதவுகிறது. சன் ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள், டேனிங் போக்க கற்றாழை ஜெல்லைத் தேர்ந்தெடுக்கவும். மேலும் முழு கை ஆடைகளை அணிந்து உங்களை மூடி வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும், வெள்ளரி துண்டுகள் மற்றும் கோல்ட் பிரெஸ்டு டேனிங் சமாளிக்க உதவும். இந்த முக்கிய குறிப்புகளை தவறாமல் பின்பற்றவும், என்று தோல் மருத்துவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“