வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வெயிலில் செல்வதால் ஸ்கின் கருமையாகிறது என்று நினைப்பவர்கள் எல்லாம் வீட்டில் வைத்து எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்று டாக்டர் பொற்கொடி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Advertisment
வெறும் மூன்று பொருட்களை வைத்து ஈஸியான ஃபேஸ் பேக் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1. ஆளி விதையை எடுத்து அதை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு எடுத்தால் ஜெல் மாதிரி கிடைக்கும். அதனை ஆறவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. கற்றாழை உள்ளே இருக்கும் ஜெல் ஃபிரஷ்ஷாக எடுத்துக் கொள்ளவும். கடையில் கிடைக்கும் கற்றாழை ஜெல்களை பயன்படுத்தக் கூடாது.
Advertisment
Advertisements
3. சாதம் வடித்த கஞ்சித் தண்ணீரை எடுத்து ஆறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் இந்த மூன்று ஜெல்களையும் எடுத்து நன்கு கலந்து முகத்தில் தேய்க்கவும். ஒரு 15 முதல் 20 நிமிடம் கழித்து கழுவி விட்டால் உடனடியாக முகம் பொலிவு பெறும். தொடர்ந்து இதனை செய்து வர முகம் நன்கு பளப்பளவென்று இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.