தக்காளி, கடலை மாவு இருந்தால் போதும்; சம்மர் சீசனுக்கு ஏற்ற சிம்பிளான ஃபேஸ்பேக்
தக்காளி மற்றும் கடலை மாவு கொண்டு இந்த சம்மர் சீசனில் பயன்படுத்தும் விதமான ஃபேஸ்பேக் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். இது நம் முகத்தை இன்ஸ்டன்ட் பொலிவாக மாற்ற உதவி செய்கிறது.
சரும பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு தற்போது பலரிடமும் இருக்கிறது. இவை அழகு சார்ந்த விஷயம் என்பதையும் கடந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறை என்ற புரிதல் நிறைய பேரிடம் இருக்கிறது. இதற்காக நேரம் ஒதுக்கி தங்கள் சரும பராமரிப்பில் ஈடுபடுகின்றனர்.
Advertisment
எனினும், ஒவ்வொரு கால சூழலுக்கும் ஏற்றார் போல் சரும பராமரிப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். மழை காலத்திற்கு ஏற்ற வகையில் ஒரு பராமரிப்பு முறை, வெயில் காலத்திற்கு பொருந்தும் வகையில் ஒரு பராமரிப்பு முறை என பின்பற்றுவது அவசியம் ஆகும்.
தற்போது கோடை காலம் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பாகவே பல ஊர்களில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் தினசரி பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலக பணிக்கு செல்பவர்கள் என எல்லோரும் வெயிலால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களது முகமும் கருமையாக மாறிவிடுகிறது.
இதனை போக்க வீட்டிலேயே சிம்பிளான ஃபேஸ்பேக்கை தயார் செய்து கொள்ளலாம். அதன்படி, ஒரு தக்காளியை எடுத்து பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். இப்போது அந்த தக்காளியில் இருந்து சாறை மட்டும் தனியாக பிரித்து எடுக்க வேண்டும். இதனை இரண்டு டீஸ்பூன் கடலை மாவுடன் சேர்த்து பசை பதத்திற்கு கலந்து கொள்ளலாம்.
Advertisment
Advertisements
இவ்வாறு செய்தால் ஃபேஸ்பேக் தயாராகி விடும். இதனை நம் முகத்தில் நன்றாக தடவி விட்டு, சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இதன் மூலம் நம் முகம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும். இதில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காததால் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகளும் ஏற்படாது.
நன்றி - Dhanancheyan_yugam Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.