தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் கோடைக் கால நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கப்பட்டுள்ளது. ‘நீச்சல் கற்றுக்கொள்’ (Learn to Swim) என்ற பெயரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்கள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கியது. முதல் நிலை முகாம்கள் ஏப்ரல் 12-ம் தேதி வரையிலும், ஜூன் 23-ம் தேதி வரை கூடுதல் முகாம்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் முகாம்கள் 5 நிலைகளிலும், 6 வகைகளிலும் நடத்தப்படும் என்றும் காலையிலும் மாலையிலும் 3 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி, ஷெனாய் நகர், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளம், நேரு உள்விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. நகரக் குளங்களுக்கு 2,000 ரூபாயும், நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள குளத்தில் பயிற்சி பெற 2,400 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“