சுட்டெரிக்கும் வெயில்... வீடு குளு குளுன்னு இருக்க தேங்காய் சிரட்டை; ரூம் க்ளீன் பண்ண ஐஸ் வாட்டர்: இப்படி ட்ரை பண்ணுங்க!
இந்த கோடை காலத்திற்கு ஏற்ற வகையில் நம் வீட்டை குளிர்ச்சியாக மாற்றும் சில எளிமையான டிப்ஸ் இந்த செய்திக் குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை சுலபமாக பின்பற்றி உங்கள் வீட்டை ஜில்லென மாற்ற முடியும்.
இந்த கோடை காலத்திற்கு ஏற்ற வகையில் நம் வீட்டை குளிர்ச்சியாக மாற்றும் சில எளிமையான டிப்ஸ் இந்த செய்திக் குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை சுலபமாக பின்பற்றி உங்கள் வீட்டை ஜில்லென மாற்ற முடியும்.
தற்போது கோடை காலம் நெருங்கி வருகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இப்போதே சில ஊர்களில் 100 டிகிரியை கடந்த வெயில் பதிவாகி இருக்கிறது. இந்த சூழலில் எல்லோரது வீட்டிலும் ஏ.சி இருக்கும் என்று கூற முடியாது. அந்த வகையில் ஏ.சி இல்லாமலே உங்கள் வீட்டை குளிர்ச்சியாக மாற்றும் டிப்ஸை பார்க்கலாம்.
Advertisment
ஒரு பாத்திரத்தில் இரண்டு சிரட்டையை வைத்து அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இந்த தண்ணீர் சேர்த்த சிரட்டை பாத்திரத்தை, ஃப்ரிட்ஜின் ஃப்ரீசர் பகுதியில் சுமார் 8 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பின்னர், இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக ஃப்ரீசரில் இருக்கும் சிரட்டயை எடுத்து, நாம் தூங்கும் அறையில் வைத்து விடலாம். அப்போது மின்விசிறியில் இருந்து வரும் காற்று, இந்த சிரட்டையில் படும் போது குளிர்ச்சியாக அறை முழுவதும் இருக்கும்.
இதேபோல், ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் எடுத்து அதில் சுமார் நான்கு அல்லது ஐந்து ஐஸ் கட்டிகள் போட வேண்டும். மாலை சுமார் 6 மணிக்கு மேல், இந்த தண்ணீரை கொண்டு வீட்டின் தரையை மாப் போட்டு துடைக்கலாம். இப்படி செய்தால் டைல்ஸ்கள் அனைத்தும் குளிர்ச்சியாக இருக்கும். வீட்டின் உஷ்ணமும் குறையும்.
வெயில் காலத்தில் ஃபேன், ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதால் மின் கட்டணம் அதிகமாக இருக்கும். இதனை குறைப்பதற்கு ஒரு ட்ரிக் இருக்கிறது. சமையலுக்கு பயன்படும் உப்பை எடுத்து, ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் அனைத்து பகுதிகளிலும் சமமாக தூவி விட வேண்டும். இப்படி செய்தால் ஐஸ் கட்டி அதிகமாக சேர்வது தடுக்கப்படும். மின்சாரமும் குறைவாக செலவாகும்.
Advertisment
Advertisements
இது போன்ற சிம்பிளான சம்மர் டிப்ஸை பின்பற்றி நம் வீட்டை குளுமையாக பராமரிக்க முடியும். இவற்றின் செயல்முறை சுலபமாக இருப்பதால், இதனை ஃபாலோ செய்வதற்கு எளிமையாக இருக்கும்.