கோடை வெயில் சுட்டெரிக்கிறது, வெப்பநிலை உயர்ந்து வருகிறது, மேலும் வெளியில் காலடி எடுத்து வைக்கும் போது ஏதோ உலைக்குள் செல்வது போல் உணர்வு வருகிறது. குறிப்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இப்போது நீங்கள் மின்வெட்டை சந்திக்கிறீர்களா, அல்லது பணத்தை சேமிக்க முயற்சிக்கிறீர்களா. உங்களிடம் ஏர் கண்டிஷனிங் இல்லாவிட்டாலும் கூட, வெயிலில் இருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன.
உங்களை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் வைத்திருக்க, கோடைகால சரணாலயமாக மாற்றும் வகையில், உதவிக் குறிப்புகள் மற்றும் தந்திரங்களை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
வியர்வை இல்லாமல் வெப்ப அலையில் இருந்து தப்பிக்க உதவும் 11 குறிப்புகள்
ஆல்கஹால், காஃபின்
டாக்டர் திவ்யா கோபால் (Internal Medicine, Sir H N Reliance Foundation Hospital) கூறுகையில், மதுபானம் உங்களை டிஹைட்ரேட் செய்து உங்களை வெப்பமாக உணர வைக்கும். சர்க்கரை பானங்கள் மற்றும் அதிகப்படியான காஃபின் ஆகியவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும், இது உங்களை மேலும் நீரிழக்கச் செய்யும்.
குஷ் திரைச்சீலைகள்
இந்திய வெப்ப அலை ஆராய்ச்சியாளர் குல்ரேஸ் ஷா அசார், குஸ் திரைச்சீலைகள் வெப்பத்தை குறைக்க உதவும் என்றார். குஸ் என்பது புல்லில் செய்யப்பட்ட பாய் போன்ற திரைச்சீலைகள், இவை கதவுகள் மற்றும் ஜன்னல்களில் தொங்கவிடப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
வெப்பமான நேரங்களில் தூங்குங்கள்
உங்கள் வேலை அனுமதித்தால், நாளின் வெப்பமான நேரங்களில் தூங்கலாம் என்றும் அசார் பரிந்துரைத்தார். வெளியே செல்வதன் மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமோ அல்லது வெளியில் நிற்பதன் மூலமோ ஆற்றலை எரிக்கவோ அல்லது சோர்வடையாமல் இருக்க முயற்சி செய்யுங்கள், ஏனென்றால் எரியும் சூரிய ஒளி மற்றும் சூடான காற்று உங்களை வெப்பமாக்கும்.
நீரேற்றம் முக்கியம்
டாக்டர் திவ்யா கூற்றுப்படி, நீங்கள் தாகம் எடுக்காவிட்டாலும், நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
எட்டு கிளாஸ் அல்லது அதற்கு மேல் குறிக்கவும், மேலும் தர்பூசணி, வெள்ளரி மற்றும் செலரி போன்ற அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உடை
பருத்தி அல்லது லினன் போன்ற இயற்கை இழைகளால் செய்யப்பட்ட தளர்வான, லைட் வெயிட் மற்றும் சுவாசிக்கக்கூடிய ஆடைகளைத் தேர்வு செய்யவும். வெப்பத்தை உறிஞ்சும் இருண்ட நிறங்களைத் தவிர்க்கவும், சூரிய ஒளியில் இருந்து உங்கள் தலையை பாதுகாக்க ஒரு தொப்பியை அணியுங்கள்.
சூரியனைத் தடுக்கவும்
சூரிய ஒளி உங்கள் இடத்தை வெப்பமாக்குவதைத் தடுக்க, நாளின் வெப்பமான நேரத்தில் (பொதுவாக மதியம்) உங்கள் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை மூடி வைக்க வேண்டும் என்று டாக்டர் திவ்யா கூறினார். பிளாக்அவுட் திரைச்சீலைகள் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
காற்றோட்டம்
இயற்கையான காற்றோட்டத்தை உருவாக்க உங்கள் வீட்டின் எதிர் பக்கங்களில் ஜன்னல்களைத் திறக்கவும். உங்கள் இடத்திற்கு மிகவும் பயனுள்ள காற்றோட்டத்தைக் கண்டறிய வெவ்வேறு காம்பினேஷன்களுடன் பரிசோதனை செய்யுங்கள்.
கூலிங் சொல்யூஷன்ஸ்
ஒரு விரிந்த பாத்திரத்தில் பனி மற்றும் தண்ணீரை நிரப்பி, புத்துணர்ச்சியூட்டும் காற்றுக்காக விசிறியின் முன் வைக்கவும். மழைக்காலத்தில் வீட்டுக்குள் ஈரத் துணிகளை காயப் போடுவதை, வெயில் காலத்திலும் செய்யலாம். இந்த ஈரமான துணிகள் ஆவியாதல் மூலம் குளிரூட்டும் விளைவை உருவாக்கலாம்.
குளியல்
புத்துணர்ச்சியூட்டும் குளியல் உங்கள் உடல் வெப்பநிலையைக் குறைத்து தற்காலிக நிவாரணம் அளிக்கும்.
ஏர் கண்டீஷன் ரெஃப்யூஜ்
உங்கள் வீடு தாங்கமுடியாத அளவு சூடாக இருந்தால், பொது நூலகம், ஷாப்பிங் மால் அல்லது ஏர் கண்டிஷனிங் கொண்ட இடங்களுக்கு சென்று சிறிது நேரம் குளிரச் செய்யுங்கள்.
சில வீட்டு தாவரங்களில் முதலீடு செய்யுங்கள். தாவரங்கள் நீராவியை வெளியேற்றும் செயல்முறையின் மூலம் காற்றை குளிர்விக்க உதவும் என்று டாக்டர் திவ்யா அறிவுறுத்தினார்.
இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், கடுமையான வெப்பத்தின் போது கூட நீங்கள் குளிர்ச்சியாகவும் வசதியாகவும் இருக்க முடியும். ஒரு சிறிய திட்டமிடல் வெப்பத்தைத் தணிக்கவும் கோடைகாலத்தை அனுபவிக்கவும் உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Read in English: Can you survive the impending heatwave without an AC? With these 11 tips, yes!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.