/tamil-ie/media/media_files/uploads/2022/06/water-2-1.jpg)
Sun charged water health benefits How to make sun charged water
உகந்த ஆரோக்கியத்திற்காக, உடலின் வைட்டமின் டி தேவைகளைப் பூர்த்தி செய்ய சூரிய ஒளியின் போதுமான வெளிப்பாடு தேவை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் ஆயுர்வேதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த சன் சார்ஜ் தண்ணீரை (sun-charged water) பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
"இது நமது பூமியை உருவாக்கும் கூறுகளில் ஒன்றான நெருப்பின் (வெப்பம்) முக்கிய ஆதாரமாகும். ஆயுர்வேதத்தின்படி, சூரிய ஒளி பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும், ”என்று ஆயுர்வேத நிபுணர் நித்திகா கோஹ்லி இன்ஸ்டாகிராமில் எழுதினார்.
சன் சார்ஜ் செய்யப்பட்ட நீர், பல வழிகளில் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
எப்படி?
சன் சார்ஜ் செய்யப்பட்ட தண்ணீரில் வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் தோல் பிரச்சினைகளைத் தடுக்கிறது.
நீங்கள் நாள் முழுவதும் ஆற்றல் பற்றாக்குறையை உணர்ந்தால், சூரிய ஒளியில் ஏற்றப்பட்ட தண்ணீரைக் குடிக்கலாம்.
இது சருமத்திற்கும் சிறந்தது, ஏனெனில் இது "சொறி, சிவத்தல் போன்ற பொதுவான தோல் பிரச்சனைகளை குணப்படுத்துகிறது மற்றும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கிறது".
நீங்கள் பொதுவான கண் அல்லது தோல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றை சன் சார்ஜ் செய்யப்பட்ட தண்ணீரில் கழுவ வேண்டும் என கோஹ்லி பரிந்துரைத்தார். "இந்த நீரில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது பொதுவான பிரச்சனைகளைத் தடுக்கிறது."
"சன் சார்ஜ் செய்யப்பட்ட நீர் முற்றிலும் இயற்கையானது, உங்கள் ஆரோக்கியத்தில் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும் மருந்து அல்லது சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால் மருத்துவரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்," என்று கோஹ்லி பரிந்துரைத்தார்.
சன் சார்ஜ் செய்யப்பட்ட தண்ணீரை எப்படி தயாரிப்பது?
சன் சார்ஜ் தண்ணீரை, வீட்டிலேயே தயாரிக்க, ஆயுர்வேத நிபுணர் பகிர்ந்துள்ள இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.
*கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் நிரப்பி குறைந்தது 8 மணி நேரம் வெயிலில் வைக்கவும். இதை தினமும் செய்யலாம் அல்லது 8 மணி நேரம் வெயிலில் 3 நாட்கள் வைத்திருந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
இந்த தண்ணீரை பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும், இது தண்ணீரின் ஆரோக்கிய நன்மைகளை குறைக்கும்.
*இந்த தண்ணீரை நாள் முழுவதும் குடிக்கவும். நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாட்டில்களை வெயிலில் வைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us