Advertisment

15 வருடங்களுக்கு முன் இந்த நாளில்தான்.. விஜே அஞ்சனா எமோஷனல்

இது எனக்கு சில முக்கிய வாழ்க்கைப் பாடங்களைக் கொடுத்துள்ளது… எல்லாவற்றிற்கும் மேலாக நான் விரும்புவதைச் செய்வதில் உள்ள தூய்மையான மகிழ்ச்சி!

author-image
WebDesk
New Update
VJ Anjana

VJ Anjana

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா, இப்போது சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ஃபாலோர்ஸ் உள்ளனர்.

Advertisment

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி அதில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம், போட்டோஷூட்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். அப்படி அஞ்சனா சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த ஒரு பதிவு பலரையும் ரசிக்க வைத்துள்ளது. 

இந்த நாள் எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல்! ஊடகத்துறையுடன் எந்த தொடர்பும் இல்லாத, மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண்.. 15 வருடங்களுக்கு முன் இந்த நாளில்தான் நான் மிக அழகான பயணத்தைத் தொடங்கினேன்,

நான் திரும்பிப் பார்க்கும்போது... இந்த வேலை இன்று நான் ஒரு நபராக என்னவாக இருக்கிறேன் என்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுத்தது.. என்னை சுதந்திரமாக மாற்றியது. இது எனக்கு சில முக்கிய வாழ்க்கைப் பாடங்களைக் கொடுத்துள்ளதுஎல்லாவற்றிற்கும் மேலாக நான் விரும்புவதைச் செய்வதில் உள்ள தூய்மையான மகிழ்ச்சி!

எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி!

உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்னும் பல ஆண்டுகள் உங்கள் உலகின் ஒரு சிறிய பகுதியாக இருப்பதற்கு நான் கடினமாக உழைத்து உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைப்பேன்!

#15 வருடங்கள் அஞ்சனா ரங்கன் கனவில் வாழ்வது போல் உணர்கிறேன்..

இப்படி அஞ்சனா எமோஷனலாக அதில் பதிவிட்டுள்ளார்.

அஞ்சனாவின் இந்த பதிவுக்கு, அர்ச்சனா, கிகி, நக்ஷ்த்திரா நாகேஷ், KPY பாலா, சரண்யா துரடி, ஆர்.ஜே. விஜய் உள்ளிட்ட பல தொகுப்பாளர்களுகும், ரசிகர்களும்  வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment