/tamil-ie/media/media_files/uploads/2019/10/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-7.jpg)
sun tv anitha sampath
sun tv anitha sampath : சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமாவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவ்வப்போது ஒருசிலர் இணையத்தில் திடீர் ட்ரெண்ட் ஆவதுண்டு. அப்படி சமீபத்தில் ட்ரெண்ட் ஆகி இணையவாசிகளால் அதிகம் ரசிக்கப்பட்டவர் தான் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.
அனிதாவின் பவ்யமான அழகு தான் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்து புகழ் பெற்றார். அவ்வளவு தான் அடுத்தடுத்த இவரின் பேட்டிகள் யூடியூப்பில் ஹிட் அடிக்க தொடங்கியது. எந்த பக்கம் திரும்பினாலும் அனிதா அனிதா ஹாஷ்டேக்குகள் தான்.
ஆரம்பத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா. சன் டிவிக்கு மாறிய சில மாதங்களிலே இண்டர்நெட்டில் ஃபேமஸ் ஆகினார். இப்போது வெளியான சூர்யாவின் காப்பான் படத்திலும் கூட அனிதாவின் முகம் தான். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று அனிதா திருமணம் செய்துக் கொண்டார்.
இவரின் திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியான பின்பு தான் பலருக்கும் தெரிய வந்தது. அனிதாவிற்கு இது காதல் திருமணம் தான் என்ற பேச்சும் உள்ளது. திருமண வாழ்க்கையில் பிஸியான அனிதா மீண்டும் தனது செய்தி வாசிப்பாளர் பணிக்கு திரும்பியுள்ளார்.
அண்மையில் இவர் தனது கணவருடன் ஹனிமூன் சென்றிருந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.