Tamil Serial News: அண்ணாமலை சீரியலில் போதைக்கு அடிமையான பெண்ணாக நடித்தாரே ஐஸ்வர்யா, அவரை ஞாபகம் இருக்கிறதா? அந்த சீரியலில் ராதிகாவின் வளர்ப்பு மகளாக ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
”அப்டி ஒன்னும் சொல்லிக்கிற மாரி அழகா இல்லயே” சமந்தாவை ட்ரோல் செய்த பூஜா ஹெக்டே!
’கங்கா யமுனா சரஸ்வதி சங்கமம்’, ‘அகல் விளக்குகள்’, ‘பந்தம்’, ‘மாங்கல்யம்’ போன்ற சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த தொடர் தான் அண்ணாமலை சீரியல். ராதிகா தயாரித்த இந்த தொடரில் போதைக்கு அடிமையான பெண்ணாக நடித்து இருப்பார். அந்த கதாபாத்திரம் மிகவும் பாராட்டப்பட்டது. இதற்கு இயக்குநர் சி.ஜே.பாஸ்கருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் ஐஸ்வர்யா. காரணம் அவர் தான், ஐஸ்வர்யாவின் திறமைகளை கண்டறிந்தாராம்.
குடும்பத்துடன்...
அண்ணாமலை தொடருக்குப் பின்னர் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்‘ படத்தில் சினேகாவின் தோழியாகவும், ’டும் டும் டும்’ படத்தில் ஜோதிகாவின் தங்கையாகவும் நடித்து இருப்பார். அதன் பின்னர் ஒருசில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த ஐஸ்வர்யா சின்ன வயதிலேயே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தாராம். அவரது அப்பா பிஸினெஸ் மேனாகவும், அம்மா இல்லத்தரசியாகவும் இருந்திருக்கிறார்கள். அக்கா திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் செட்டில். அதன் பின்னர் தாமும் திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா, நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டார்.
தமிழ் கற்கும் ராஷி கண்ணா, குட்டி ஸ்ருதி: படத் தொகுப்பு
‘நான் நடிப்பை விட்டு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல இருக்கும். ஆனா என்னை இன்னும் எல்லாரும் ஞாபகம் வச்சிருக்காங்க. திருமணத்துக்குப் பிறகு துபாய்க்குப் போக வேண்டிய சூழல். அதனால, நடிப்புக்கு பிரேக் எடுத்துட்டு துபாய் கிளம்பினேன். அப்புறம் எனக்கு பையன் பிறந்தான். அவனைப் பார்த்துக்க வேண்டி இருந்துச்சு. இப்போ என் லைஃப் ஸ்டைலே மாறிடுச்சு. அங்க ‘சூப்பர் சிங்கர்’ மாதிரி ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். தற்போது ஒரு எஃப்.எம்மில், ஆர் ஜேவாகவும் இருந்து வருகிறேன்’ என மகிழ்ச்சியாகிறார் ஐஸ்வர்யா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”