Chithi 2 Preethi Sharma : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘சித்தி 2’ சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ப்ரீத்தி ஷர்மா. ராதிகாவின் பாசத்திற்குறிய மகளாக, சித்தியின் மீது உயிரையே வைத்திருக்கும் கதாபாத்திரம் ப்ரீத்திக்கு.
ஆனால் இவர் அறிமுகமாகியது என்னவோ, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், திருமணம் சீரியலில் தான். அதில் கதாநாயகிக்கு தங்கையாக அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அனிதா – நவீன் என்ற அந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. திருமணம் சீரியல் நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில், திடீரென ப்ரீத்தி அதிலிருந்து விலகியது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சித்தி சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதால், தன்னால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை என பின்னர் வீடியோ மூலம் பதிலளித்திருந்தார் ப்ரீத்தி.
Advertisment
Advertisements
19 வயதாகும் இவர், காலேஜ் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் அடிப்படையில் வட இந்தியப் பெண். சொந்த ஊர் லக்னோ. ஆனால் ப்ரீத்தியின் குடும்பம் கோயம்புத்தூரில் செட்டில் ஆகியிருக்கிறது. அப்பா, அம்மா, 2 தம்பிகள் என மகிழ்ச்சியாக இருக்கும் ப்ரீத்திக்கு வீட்டில் பயங்கர சப்போர்ட்டாம்.
தவிர, டிக் டாக்கில் செம ஆக்டிவ்வாக இருக்கும் ப்ரீத்தி, அங்கு தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். பாடுவதில் மிகுந்த ஆர்வம் மிகுந்த ப்ரீத்தி, அதில் தான் தனது கரியர் இருக்க வேண்டும் என நினைத்தாராம். இப்போது அவரே எதிர்பார்க்காத வகையில், நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து பூரிப்படைகிறார். இருப்பினும் எதிர்காலத்தில் நல்ல பாடகியாக வர வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறதாம்...
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"