கல்யாணப் பரிசு ஸ்ரீத்திகா இத்தனைப் படங்களில் நடித்துள்ளாரா?

ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, ஹீரோவுக்கு அம்மாவாக, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கல்யாணம் கல்யாணம் சீரியலில் ஒப்பந்தமானார்.

By: November 19, 2019, 4:27:12 PM

Kalyana Parisu Srithika : சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை ஸ்ரீத்திகா. மெட்டிஒலி சீரியலில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து, ’முகூர்த்தம்’, ‘கலசம்’, ‘கோகுலத்தில் சீதை’ என தொடர்ந்து சீரியல்களில் நடித்தாலும், ‘நாதஸ்வரம்’ சீரியலின் மலர் கதாபாத்திரம் தான் ஸ்ரீத்திகாவை நன்கு அடையாளப்படுத்தியது.

Serial artist Srithika lifestyle ஸ்ரீத்திகா

ஸ்ரீத்திகாவின் தந்தை மலேசியாவில் பிஸினஸ் செய்து வந்ததால், அவரின் குடும்பமும் அங்கேயே இருந்தது. மலேசியாவில் தனது படிப்பை முடித்துவிட்டு சென்னையில் குடியேறிய ஸ்ரீத்திகா, தனது அக்கா சுதா மூலம் விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Serial artist Srithika lifestyle ஸ்ரீத்திகா

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்த சுதா தற்போது சீரியல்களிலும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ’வெண்ணிலா கபடி குழு’, ’மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’, ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’, ‘வேங்கை’ ஆகியப் படங்களிலும் ஸ்ரீத்திகா நடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு தொலைக்காட்சி சீரியல்கள் தான் பெரும் வரவேற்பை அளித்தது.

Serial artist Srithika lifestyle ஸ்ரீத்திகா

ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, ஹீரோவுக்கு அம்மாவாக, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கல்யாணம் கல்யாணம் சீரியலில் ஒப்பந்தமாகி 6 மாதங்கள் வரை நடித்தார். பின்னர் கல்யாணப்பரிசு சீரியலின் வாய்ப்பு வரவே, மீண்டும் தாய்வீடான சன் தொலைக்காட்சிக்குத் திரும்பி விட்டார். பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவதை தனது பொழுதுப் போக்காக வைத்திருக்கும் ஸ்ரீத்திகாவுக்கு நீல நிறமும், சிக்கனும் மிகவும் பிடித்தவைகளாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Sun tv kalyana parisu srithika nadhaswaram malar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X