ராசிபலன் சொல்லும்போது விபூதி குங்குமம் வைக்கமாட்டேன்: விஜே விஷால் மலரும் நினைவுகள்

90-களில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் நாம் இருந்தாலும், அவரது குரல் நம்மை ஒரு கணம் நிறுத்தி, இன்றைய ராசி பலனை கேட்க வைக்கும். ராசி பலன் என்பது ஒரு நம்பிக்கை, அதை அவர் வாசித்த விதம், ஒரு தனி ஈர்ப்பை ஏற்படுத்தியது.

90-களில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் நாம் இருந்தாலும், அவரது குரல் நம்மை ஒரு கணம் நிறுத்தி, இன்றைய ராசி பலனை கேட்க வைக்கும். ராசி பலன் என்பது ஒரு நம்பிக்கை, அதை அவர் வாசித்த விதம், ஒரு தனி ஈர்ப்பை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
Sun TV Rasipalan Anchor Vishal Sundar

Sun TV Rasipalan Anchor Vishal Sundar

சூரிய உதயத்தின் ஒளியில், நம் அனைவருக்கும் ஒரு புன்னகையையும், அன்றைய நாளுக்கான நம்பிக்கையையும் விதைத்த அந்த குரல், மீண்டும் நம் நினைவுக்கு வருகிறது. சன் டிவியின் ராசி பலன் நிகழ்ச்சியில், 'அனுகூலமான திசை' என்று கூறி, ஒவ்வொருவர் மனதிலும் நம்பிக்கை விதையை விதைத்தவர், விஜே விஷால் சுந்தர். 90-களில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் நாம் இருந்தாலும், அவரது குரல் நம்மை ஒரு கணம் நிறுத்தி, இன்றைய ராசி பலனை கேட்க வைக்கும். ராசி பலன் என்பது ஒரு நம்பிக்கை, அதை அவர் வாசித்த விதம், ஒரு தனி ஈர்ப்பை ஏற்படுத்தியது.

Advertisment

ராசி பலன் வாசிப்பது என்பது ஒரு எளிதான காரியம் அல்ல. ஒரு சில நிமிடங்களில், ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். விஜே விஷால் சுந்தர் அதை மிக அழகாக செய்தார். அவரது தெளிவான உச்சரிப்பும், நம்பிக்கையூட்டும் தொனியும், ராசி பலனை ஒரு ஆழமான அனுபவமாக மாற்றியது. 'மேஷ ராசி நேயர்களே...' என்று அவர் தொடங்கும்போது, அது வெறும் ஒரு வாக்கியம் அல்ல, அன்றைய தினத்துக்கான ஒரு வழிகாட்டியாகவே பலரும் உணர்ந்தனர்.

"ஆரம்பத்துல எங்க அம்மா நிறைய நகை, விபூதி, குங்குமம் எல்லாம் போட்டுக்க சொன்னாங்க. ஆனா, எனக்கு அதுல அவ்வளவு விருப்பம் இல்லை. நான் கொஞ்சம் சிம்பிளா இருக்கணும்னு நினைப்பேன்.

Advertisment
Advertisements

ஜோதிடம்ங்கிறது எந்த ஒரு மதத்துக்கும் சொந்தம் இல்ல. அதனால, நான் விபூதி, குங்குமம் வைக்கிறது ஒரு சில ரசிகர்களை சங்கடப்படுத்தலாம்னு யோசிச்சேன். அதனால, விபூதி, குங்குமம் வைக்காம வெறும் நெத்திப் பொட்டு மட்டும் வச்சுக்கலாம்னு முடிவெடுத்தேன்.

கல்யாணத்துக்கு அப்புறம், செயின், கம்மல்னு ரொம்ப சிம்பிளா மாறிட்டேன். எனக்கு பெரிய கம்மல் போடுறது ரொம்ப பிடிக்கும். அதனால, எப்பவுமே பெரிய கம்மல் போட்டுப்பேன். தீபாவளி, பொங்கல் மாதிரி விசேஷ நாட்கள்ல, இல்ல என் நண்பர்கள், சக கலைஞர்கள் எல்லாரும் நீ இன்னும் கொஞ்சம் கிராண்டா பண்ணலாம்னு சொன்னா, அப்ப மட்டும் கொஞ்சம் பெரிய நகைகள் போட்டுப்பேன்” என்று அந்த பழைய மலரும் நினைவுகளை பற்றி பேட்டியில் பகிர்ந்து கொண்டார் விஷால்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: