Metti Oli Saro : மெட்டி ஒலி சீரியல் அனைவருக்கும் நினைவில் வருவது, சரோஜா என்ற சரோ கதாபாத்திரம் தான். சேத்தனுக்கு மனைவியாக நடித்த சரோவின் நிஜப்பெயர் காயத்ரி சாஸ்த்திரி. நடிகை காயத்ரியின் பூர்விகம் கர்நாடகம். ஆனால், பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில். காயத்ரியின் அண்ணன் சஞ்சய். இவரும் நடிகர் தான். ஒரு நாள் அண்ணனின் பேட்டியப் பார்க்க சென்னை வந்த காயத்ரியைப் பார்த்த இயக்குனர் சுரேஷ் மேனன் படத்தில் நடிக்கக் கேட்டிருக்கிறார்.
காயத்ரியும் சரி என்று சொல்லவே, பின் சுரேஷ் மேனன் இயக்கிய ‘பாசமலர்’ படத்தில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் காயத்ரி. பின்னர் விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்திலும் நடித்தார்.
படங்களில் பிஸியான ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, குட்டி பத்மினி ஒரு இந்தி சீரியலில் நடிக்க காயத்ரியை கேட்டுள்ளார். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘குடும்பம், சாவித்திரி, லட்சியம்’ உட்பட பல சீரியலிலும் நடித்தார். திருமுருகன் டைரக்ஷனில் ஏற்கனவே இரண்டு சீரியல்களில் நடித்திருந்தாலும், அவர் மூன்றாவதாக நடித்த ‘மெட்டி ஒலி’ சீரியல் தான் காயத்ரியை சின்னத்திரை ரசிகர்களுக்கு அடையாளப் படுத்தியுள்ளது.
சின்னத்திரை இயக்குநர் ரவி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட காயத்ரி, குழந்தை பிறந்ததும் சீரியல்களுக்கு சின்ன இடைவெளி விட்டிருந்தார். தற்போது குழந்தை சற்று வளர்ந்து விட்டதால், சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலில், கல்பனா என்ற கதாபாத்திரத்தில், ரோஜாவின் மாமியாராக நடித்து வருகிறார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Sun tv serial metti oli saro roja kalpana
இன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் – பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
எஸ்ஏசி-க்கு விஜய் பகிரங்க நோட்டீஸ்: ‘எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது’
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
Tamil News Today Live : என் மனதின் குரலை பேச வரவில்லை, உங்கள் குரலை கேட்க வந்தேன் – ராகுல் காந்தி