/tamil-ie/media/media_files/uploads/2019/10/bf727d3fc83ed8084bdbfcd15c247911.jpg)
sun tv sun singer
sun tv sun singer : வீஜேவாக சின்னத்திரையில் தனி ரசிகர் பட்டாளத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் நக்ஷத்ரா, குறும்படங்களில் நடிப்பதுடன், சினிமா கனவுகளுடன் குறும்பட இயக்குநராக அடியெடுத்து வைக்கும் பலருக்கும் பக்கபலமாக இருக்கிறார்.
சன் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்தவர் நக்ஷத்ரா. தொடர்ந்து தந்தி தொலைக்காட்சி உள்ளிட்ட பல சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
சின்னத்திரை தொகுப்பாளிகள் வெள்ளித்திரைக்கு வருவது சாதாரணமே. ஆனால் கதாநாயகியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. நாயகிகளுக்கு தோழிகளாகவோ அல்லது குணச்சித்திர வேடங்களோதான் கிடைக்கும். அந்த வகையில் தொகுப்பாளினி நக்ஷத்ரா அதிர்ஷ்டசாலி. இவர் நடித்த ஏனோ வானிலை மாறுதே குறும்படம் இணையத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதுமட்டுமில்லை இவருக்கு சமூகவலைத்தளங்களில் தனி ரசிகர்கள் கூட்டமே குவிய தொடங்கியது.
இப்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலிலும் இவருக்கு லீட் ரோல் தான். லக்ஷ்மி ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் சில அசத்தல் புகைப்படங்களை எடுத்து தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவது இவரது வழக்கம். அந்த வகையில் இவர் தினம் தினம் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள் அதிக லைக்ஸ்களை அள்ளிய ஃபோட்டோக்களை இங்கே பாருங்கள்.
அதுமட்டுமில்லை இவர் தீவிரமான அஜித் ரசிகையும் கூட. சமீபத்தில் இவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் ”அஜித்தை நேரில் பார்த்தால் ஏன் உங்கள் பட புரொமோஷன்களில் கலந்து கொள்வதில்லை என்று நிச்சயம் கேட்பேன். தேர்தல் சமயத்தில் திருவான்மியூர் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு ஓட்டுப் போட அவர் வருகிறார் என்றால் அன்று சீக்கிரமே அலாரம் வைத்து எழுந்துவிடுவேன்” என்று கூறி இருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.