Serial Actress Sridevi Ashok Pregnancy Healthy Life Tips
Tv Serial Actress Sridevi Ashok Pregnancy Healthy Life Tips : புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படம் மூலம் தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகமானவர், பின்னாளில் டாப் சீரியல்களில் பலரின் ஃபேவரைட்டான நட்சத்திரமாய் ஜொலித்தார் ஸ்ரீதேவி அசோக். 'கஸ்தூரி', 'இளவரசி', 'வாணி ராணி' என 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் வில்லி, நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் கருவுற்றிருக்கும் ஸ்ரீதேவி, கர்ப்பகால டிப்ஸ்களை பகிர்ந்திருக்கிறார்.
Advertisment
Sridevi Ashok Pregnancy Tips
"ஆரோக்கியமான உணவுகள்தான் முதலில் முக்கியம். நிறையப் பசிக்கிறது என்பதற்காகப் பார்ப்பதையெல்லாம் சாப்பிட கூடாது. முக்கியமாக ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைத் தவிர்க்கவேண்டும். ஆரோக்கியமானதை மட்டும் சாப்பிட வேண்டும். இரும்பு சத்து அல்லது ஃபோலிக் ஆசிட் நிறைய இருக்கும் உணவுகளை சாப்பிடுவது சிறந்தது. நிறையத் தண்ணீர் குடிப்பது இன்னும் நல்லது.
Sridevi with her Husband
Advertisment
Advertisements
நடைப்பயிற்சி மிகவும் அவசியம். முக்கியமாக யார் என்ன சொன்னாலும் காதுலையே வங்கிக்காதிங்க. உங்க மனசுக்கு எது சந்தோஷம் தருகிறதோ அதை செய்துகொண்டு சந்தோஷமாக இருப்பது அவசியம். நாம் எந்த அளவிற்கு ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கிறோமோ அந்த அளவிற்குக் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். ஆரோக்கியமாக இருந்தால் உடல் எடை அதிகரிக்குமோ என்கிற பயமும் வேண்டாம். சாப்புடுற சாப்பாடு மிகவும் முக்கியம். அதேபோல உறக்கமும் முக்கியம். அதனை 10 மாதத்திற்கும் கடைப்பிடிப்பதுதான் இன்னும் அவசியம்"
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil