அதே போட்டோ! பிரபல துபாய் யூடியூபரை திருமணம் செய்யும் சுனைனா?

சுனைனா பிரபல துபாய் யூடியூபர் காலித் அல் அமெரி (40) என்பவரை நிச்சயம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சுனைனா பிரபல துபாய் யூடியூபர் காலித் அல் அமெரி (40) என்பவரை நிச்சயம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

author-image
WebDesk
New Update
Sunaina

Sunaina

பிரபல துபாய் யூடியூபர் காலித் அல் அமெரி என்பவருடன் நடிகை சுனைனாவுக்கு திருமண நிச்சயம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சுனைனா நடிப்பில் கடந்த ஆண்டு கடைசியாக வெளியான ரெஜினாதிரைப்படம், ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அடுத்து அவர் நடிக்கும் படங்கள் குறித்து அறிவிப்பு எதுவும் இல்லை.

சமீபத்தில் சுனைனா தனது இன்ஸ்டாவில் நிச்சயம் முடிந்ததை குறிக்கும் வகையில் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

இது தொடர்பான மற்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

இந்நிலையில், சுனைனா பிரபல துபாய் யூடியூபர் காலித் அல் அமெரி (40) என்பவரை நிச்சயம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment
Advertisements

கடந்த 5 நாள்களுக்கு முன், சுனைனா பதிவிட்டதைப் போன்று மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படத்தை காலித் தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

காலித் தனது குடும்பத்துடன் இந்தியா வந்து நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளிப்படையாக இருவரும் தெரிவிக்காத நிலையில், சுனைனா, காலித் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

துபாயை சேர்ந்த காலித் அல் அமெரி, ஸ்டான்போர்டில் பட்டம் பெற்றவர் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். இவரது சேனலை 3 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

காலித் தன்னுடைய முதல் மனைவியான சலமா முஹம்மது என்பவரை 6 மாதங்களுக்கு முன் விவாகரத்து செய்தார். யூடியூபில் மில்லியன் கனக்கான ஃபாலோயர்ஸ் மூலம், காலித் மற்றும் சலாமா மத்திய கிழக்கில் மிகவும் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் கபிள் ஆக இருந்தார்கள்.

காலித் தற்போது சென்னையில் இருப்பதாகத் தெரிகிறது, சென்னையைச் சேர்ந்த யூடியூபர் இர்பான் திருமணத்தில் கலந்துகொள்ள 2023 இல் காலித் சென்னை வந்திருந்தார். சமீப காலமாக, மம்முட்டி உட்பட பல இந்திய பிரபலங்களையும் பேட்டி எடுத்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dubai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: