சுவை, ஆரோக்கியமான சுண்டைக்காய் துவையல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். சுண்டைக்காய் பசியை தூண்டும் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதோடு செரிமான பிரச்சனை, வயிற்று மந்தம் , வயிற்றுக் கோளாறு உள்ளிட்டவைகளுக்கும் இது மருந்தாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
இளம் சுண்டைக்காய் – 1 கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 2
உப்பு – தேவைக்கு ஏற்ப
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், உளுந்தம்பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கவும். அதே கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி சுண்டைக்காயை முழுதாக அப்படியே வதக்கவும். நன்றாக வதங்கியதும் அடுப்பை ஆப் செய்துவிடவும். பொடி செய்த பொருட்களுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றிப்பிறகு வதக்கிய சுண்டைக்காயைச் சேர்த்து உப்பு சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். அவ்வளவு தான் சுவையான, சத்தான சுண்டைக்காய் துவையல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“