சுண்டைக்காயில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சுண்டைக்காயில் பல்வேறு ரெசிபிக்கள் செய்யலாம். இங்கு சுண்டைக்காய் துவையல் செய்வது குறித்துப் பார்ப்போம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும். அஜீரணக்கோளாறு, வயிற்று பிரச்சனை, குடல் புழு பிரச்சனையை சரி செய்யும்.
தேவையான பொருட்கள்
பச்சை சுண்டைக்காய் – 1 கப்
சீரகம்- 1 ஸ்பூன்
கடலைபருப்பு- 3 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
வரமிளகாய் – 6
புளி – சிறிதளவு
இஞ்சி-2
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
செய்முறை
முதலில் பச்சை சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் கடாய் வைத்து இரண்டு இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சுண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு மீண்டும் அடுப்பில் கடாய் வைத்து இரண்டு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, சீரகம், கருவேப்பிலை, புளி, இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அப்போது தான் இஞ்சியின் காரம் அதிகமாக இருக்காது.
இஞ்சி சுருள வதங்கியதும் வரமிளகாய்களை இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். இவற்றை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து அதே எண்ணெயில் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள பச்சை சுண்டைகாய்களை சேர்த்து நிறம் மாறி வெள்ளையாக மாற ஆரம்பிக்கும் வரை வதக்கவும். அப்போது தான் சுண்டைக்காயின் கசப்பு தெரியாது. பின்னர் ஒரு மிக்சி ஜாரில் வதக்கிய சுண்டைக்காய், தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். இதை எடுத்து துவையலில் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான சத்து நிறைந்த சுண்டைக்காய் துவையல் ரெடி. சூடு சோற்றில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி இந்த துவையல் சேர்த்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“