மிகவும் ஆரோக்கியம் நிறைந்த சுண்டைக்காய் சட்னி இப்படி செய்து பாருங்க. 15 நிமிடங்களில் ரெடி ஆகிவிடும்.
தேவையான பொருட்கள்
1 கப் சுண்டைக்காய்
1 டீஸ்பூன் கடலை பருப்பு
1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
8 சின்ன வெங்காயம்
4 வத்தல்
1 தக்காளி
தேவையான அளவு உப்பு
அரை கப் தேங்காய் துருவியது
கொஞ்சம் புளி
எண்ணெய்
கருவேப்பிலை
கடுகு
செய்முறை: சுண்டைக்காய்யை நன்றாக கழுவி இடித்துக்கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து வத்தல், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தேங்காய் துருவல், புளி, சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், அதை ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதை சட்னியில் சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“