ஒரு முறை சுண்டைக்காய் குழம்பு, இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் 2 கப்
சின்ன வெங்காயம் 10
மல்லி 2 ஸ்பூன்
1 ஸ்பூன் சீரகம்
கால் ஸ்பூன் வெந்தயம்
5 வத்தல்
1 ஸ்பூன் மிளகு
உப்பு
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ½ மிளகாய் பொடி
1 ஸ்பூன் மல்லிப் பொடி
2 தக்காளி அரைத்தது
செய்முறை: எண்ணெய்யில் சுண்டைக்காய்யை வதக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் வத்தல், சீரகம், மல்லி, மிளகு, வெந்தயம் சேர்த்து வறுக்க வேண்டும். இதை அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயம், சேர்த்து கிளரவும். தொடர்ந்து சுண்டைக்காய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் அரைத்த பொடியை சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, வத்தல் பொடியை சேர்த்து கிளரவும். தக்காளி அரைத்ததை சேர்த்து கிளரவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை காத்திருக்கவும்.