செம்ம சுவையான சுண்டைக்காய் துவயல், இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 கப் சுண்டைக்காய்
2 ஸ்பூன் நல்லெண்ணெய்
1 ஸ்பூன் கடலை பருப்பு
1 ஸ்பூன் சீரகம்
1 ஸ்பூன் எள்ளு
1 வெங்காயம்
3 பூண்டு
2 ஸ்பூன் தேங்காய் துருவல்
2 வத்தல்
கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமல்லி
சின்ன அளவு புலி
உப்பு
செய்முறை: முதலில் சுண்டைக்காய்யை நன்றாக கழுவி இடித்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு, சீரகம், எள்ளு சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல், வத்தல், கருவேப்பிலை, கொத்தமல்லி, புலி சேர்த்து கிளரவும். இடித்த சுண்டைக்காய்யை சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து கிளர வேண்டும். தொடர்ந்து இதை உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும்.