sundar pichai lifestyle : கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி பல் இடங்களில் நாம் படித்திருப்போம். மதுரையை சேர்ந்த சுந்தர் பிச்சை தனது கடினமான உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இன்று அடைந்திருக்கும் புகழ் அனைவரையும் பொறாமை படவைத்துள்ளது என்பதே உண்மை.
Advertisment
இவரின் வெற்றி ரகசியம் இன்றைய இளைஞர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. சுந்தர் பிச்சை கல்லூரி மாணவர்கள், சிறு தொழில் முனைவோர்கள் என என அடுத்தக்கட்டத்திற்கு செல்ல இருக்கும் பலருக்கும் சிறப்பு உரை ஆற்றி வருகிறார். அவரை பல்வேறு பொது நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் சிறப்பு விருந்தினராக அழைத்து தனது அனுபவத்தை பகிருமாறு அன்பு கோரிக்கைகளை வைக்கின்றனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசிய சுந்தர் பிச்சை வெற்றிக்கான காரணிகளை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.
அவர் பேசியவை: “ உங்களுக்கான கனவுகளை நீங்களே தேர்ந்தெடுங்கள். அது கனவாய் மற்றும் நின்று விட கூடாது நிஜ உலகில் அதை செயல்படுத்த வேண்டும். அதற்கு முயற்சி விடா முயற்சி மிகவும் அவசியம். நீங்கள் உங்களின் வெற்றியை அடைய வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது அவசியமற்றது உங்களின் நோக்கம் எதுவரை சென்றது என்பதே முக்கியம்.
என் இளமை பருவத்தில் என் கல்லூரி மற்றும் பள்ளி படிப்பை பற்றி பலவிதமாக விமர்சித்துள்ளனர். இந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை அப்படி இப்படி என ஏகப்பட்ட கருத்துக்கள். ஆனால் வாழ்க்கை வெறும் கல்லூரி படிப்பை மற்றும் சார்ந்தது இல்லை. வாழ்க்கை அதிலிருந்து மிகவும் வித்தியாசமானது, எனவே உங்கள் நம்பிக்கையை நிலைநிறுத்துவதும், உங்கள் கனவுகளை பின் தொடர்வதும் அவற்றைப் பின்பற்ற முயற்சிப்பது மட்டுமே முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற முடிவு உங்கள் கையில். நீங்கள் தான் அதை தேர்ந்தெடுக்க வேண்டும் சரியான பாதையில். வெளி உலகத்தின் பார்வையை பற்றி அதிகம் யோசிக்காதீர்கள்” என்று கூறியுள்ள்ளார்.