சென்னை போட்டோகிராபரின் புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுந்தர் பிச்சை

தமிழ்நாட்டைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுந்தர் பிச்சை; பிரியங்கா சோப்ரா ரியாக்‌ஷன்

author-image
WebDesk
New Update
Instagram vs Reality Perfectly Described By Sundar Pichai

தமிழ்நாட்டைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுந்தர் பிச்சை; பிரியங்கா சோப்ரா ரியாக்‌ஷன்

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை ஞாயிற்றுக்கிழமை தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Advertisment

சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் பிக்சல் ஃபோனைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கால் ஈர்க்கப்பட்ட பாரம்பரியத்தைத் தொடர்கிறார், டிம் குக் ஒவ்வொரு தீபாவளியிலும், இந்தியாவில் உள்ள பயனர்களால் ஐபோன்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

சுந்தர் பிச்சை புகைப்படக் கலைஞர் மதன் மோகன் ராம் கிளிக் செய்த புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, "இந்த வார இறுதியில் தீபாவளி கொண்டாட்டங்களை முன்னிட்டு, பல ஆண்டுகளாக #TeamPixel எடுத்த புகைப்படங்களை ரசிக்கிறேன் - இதோ @madhanmohan_r இன் புகைப்படம். மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்," என்று பதிவிட்டார்.

Advertisment
Advertisements

மதன் மோகன் ராம் தனது படத்தைப் பகிர்ந்ததற்காக சுந்தர் பிச்சைக்கு நன்றி தெரிவித்தார். "மிக்க நன்றி @ சுந்தர்பிச்சை சார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்" என்று மதன் மோகன் ராம் பதிவிட்டுள்ளார்.

சுந்தர் பிச்சையின் இந்த பதிவு இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது. நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்த பதிவை விரும்பி, இதயம் எமோஜிகளை பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, சுந்தர் பிச்சை தீபாவளிக்கு முன் கூகுளில் முதல் ஐந்து தேடல்களைப் பகிர்ந்துள்ளார். "இந்தியர்கள் ஏன் தீபாவளி கொண்டாடுகிறார்கள்?, நாம் ஏன் தீபாவளி அன்று ரங்கோலி போடுகிறோம்?, தீபாவளி அன்று ஏன் விளக்குகள் ஏற்றுகிறோம்?, தீபாவளி அன்று ஏன் லட்சுமி பூஜை செய்யப்படுகிறது? மற்றும் "தீபாவளி அன்று எண்ணெய் குளியல் ஏன்" என்ற கேள்விகள் அதில் அடங்கியிருந்தன.

இதற்கிடையில், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இந்திய ஐபோன் 15 பயனரான சந்தன் கன்னாவின் படத்தை பகிர்ந்துள்ளார். "தீபாவளி வாழ்த்துக்கள்! உங்கள் கொண்டாட்டங்கள் அரவணைப்பு, செழிப்பு மற்றும் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சி ஆகியவற்றால் நிரப்பப்படட்டும். ஐபோன் 15 ப்ரோ மேக்ஸில் சந்தன் கண்ணா படமாக்கினார்," என்று டிம் கும் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Google Diwali Sundar Pichai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: