Sundari Gabrella Sellus about Color Complexion Tamil News
Sundari Gabrella Sellus about Color Complexion Tamil News : உலகெங்கிலும் எந்தத் துறை எடுத்துக்கொண்டாலும் நிற பாகுபாடு என்பது தவிர்க்கமுடியாதது. அதிலும், தென்னிந்தியத் திரைத்துறையில் வெளிர் நிறத்திற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்கிற பிம்பம் உண்டு. அதிலும், இந்த பிரச்சனை கதாநாயகிகளுக்கு மட்டுமே பொருந்தும். இதனை உடைத்தவர்கள் வெகு சிலரே. அந்த வரிசையில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனக்கென தனி அங்கீகாரம் பெற்றிருக்கிறார் கேபிரியல்லா செலஸ்.
Advertisment
நிறம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எப்படி தகர்த்தெறிந்தார் என்பதைப் பற்றி சமீபத்தில் பகிர்ந்துகொண்டார். "என்னுடைய 8 வருடப் போராட்டத்திற்குப் பலன் இப்போது முன்னணி கதாபாத்திரக்கான தேர்வு. மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதிலும், என்னுடைய நிறத்திலேயே நடிக்கிறேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
சிறு வயதில் நிறம் பற்றிய பிரச்சனை எல்லாம் எனக்குத் தெரியவில்லை. எப்போது என்னுடைய கனவை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேனோ, அப்போதுதான் எல்லா பிரச்சினையும் சந்திக்க ஆரம்பித்தேன். எங்கு சென்றாலும், நிராகரிப்பை மட்டுமே பரிசாய் பெற்றேன். அதுபோன்ற சமயங்களில் அழுவேன், நிறைய அழுவேன். அந்த நேரத்தில் எனக்குள் வந்த தைரியம்தான், தடைகளையெல்லாம் உடைத்தது. பெரிய பெரிய பிரபலங்கள் எல்லோருமே இதுபோன்ற ஏதாவதொரு தடையைத் தாண்டிதான் சாதித்துள்ளனர். அந்த வகையில் என் கனவை நிறைவேற்றியது என் நிறம்தான்.
என்னுடைய நிறம் எனக்கு மிகவும் பிடிக்கும். என் போல் இருக்கும் ஏராளமான பெண்கள் எனக்கு மெசேஜ் அனுப்புவார்கள். அதையெல்லாம் படிக்கும்போது எனக்கு தொண்டை அடைக்கும். நம் முன்பு நல்லபடியாகப் பேசுவார்கள். ஆனால், முதுகில் குத்தும் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். இதையெல்லாம் நாம் என்றைக்குமே கண்டுக்கக்கூடாது. முதலில் நம்மை நாம் நம்பவேண்டும். கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், அதிலுருந்து வெளியே வர முயற்சி செய்தால் நிச்சயம் முடியும்.
சிறு வயதிலிருந்தே என்னை ஊக்கப்படுத்தியவர் என் அம்மா. ஆனால், அவரையே மிஞ்சும் அளவிற்கு என்னுடைய கணவர் என் மீது அதிகம் நம்பிக்கையும் அன்பும் வைத்திருக்கிறார். என்னுடைய கனவுகளுக்குப் பக்கபலமாக இருக்கிறார். என்னை எப்போதும் என் போலவே இருக்க சொல்லுவார். அந்த ஒரு வார்த்தை போதுமே எதையும் சாதிக்க!"
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil