/tamil-ie/media/media_files/uploads/2021/04/Gabup.jpg)
Sundari Gabriella Sellus Motivation Beauty Tips Tamil News : திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள், பல்வேறு தடைகளால் தேங்கி நிற்கிறார்கள். அதில் முதலிடத்தில் இருப்பது நிறம் மற்றும் உடலமைப்புதான். வெளிர் நிறம், சீரான உடலமைப்பு உள்ளவர்கள் மட்டுமே தமிழ் திரைத்துறையில் நிலைத்து நிற்க முடியும் என்கிற கோட்பாட்டை உடைத்தெறிந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர், 'சுந்தரி' கேபிரியல்லா செல்லஸ். சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றில் அவர் பகிர்ந்துகொண்ட தன்னம்பிக்கை தரும் பதிவு இங்கே.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Gab3.png)
"என்னைப் பொறுத்தவரை வெளிர் நிறமாக மாறவேண்டும் என்று நினைப்பது தவறு. இருக்கும் நிறத்தை எப்படி பொலிவாக மாற்றி, மெருகேற்றிக்கொள்வது என்பதுதான் முக்கியம். கருப்பா இருக்கிறவங்க மாடர்ன் ட்ரெஸ் போட்டா நல்லா இருக்காதுன்னு சொல்லுவாங்க. அப்படியெல்லாம் இல்லை. நம் நிறத்திற்கு ஏற்ற எந்தவித உடையையும் நாம் அணியலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Gab2.png)
ஸ்கின் டோனுக்கு ஏற்ற ஃபவுண்டேஷன், லிப்ஸ்டிக் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி இருக்கிற அழகை மேலும் மெருகேற்றுவதில் எந்தவித தவறும் இல்லை. நம் வெளிப்புறத் தோற்றதை பற்றி யார் என்ன தவறாகச் சொன்னாலும், முதலில் அழுகை வரத்தான் செய்யும். ஆனால், அதை வெளிப்படுத்தக்கூடாது. அந்த நிலையிலேயே நின்றுவிடக்கூடாது. இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி, எப்படி நாம் வெளியே வருகிறோம் என்பது முக்கியம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Gab1.png)
திரைத்துறையில் வரவேண்டும் என்று நினைக்கிறவர்கள், நிறம் மற்றும் உருவத்தை வைத்து தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்வார்கள். அது தேர்வு செய்பவர்களின் பிரச்சனைதானே தவிர, முன்னேற வேண்டும் என்று நினைக்கிற நம் தவறல்ல. அதனால், நம் ஓட்டத்தை ஒருபோதும் நிறுத்திவிடக்கூடாது. எந்தக் காரணத்தைக்கொண்டும், நம் திறமை மீது இருக்கிற நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. நம்மை நாம் நம்புவது அவசியம்".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.