6 வயதில் மலையாள சினிமா அறிமுகம்.. 90ml டூ சுந்தரி சீரியல்.. ஸ்ரீகோபிகா பர்சனல் ப்ரொஃபைல்!

தமிழ் சின்னத்திரையில் முதன் முதலில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘உயிரே’ சீரியலில் என்ட்ரி ஆனார்.

shree gopika

சன்டிவியின் சுந்தரி சீரியலில் அனுவாக நடித்து வருபவர் ஸ்ரீகோபிகா நீல்நாத். கேரளாவை சேர்ந்தவர். இவரது அப்பா தொழிலதிபர். பாலக்காட்டில் பள்ளி படிப்பை முடித்த இவர் கோவையில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். 6 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஹாய் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு 11 வயதில் மம்முட்டியின் Fireman படத்தில் பத்திரிகையாளர் கேரக்டரில் நடித்துள்ளார். சிறு வயதிலேயே நடிப்பு அதிக ஆர்வம் இருந்ததால் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே மாடலிங் செய்ய ஆரம்பித்துள்ளார். ஸ்ரீ குமரன் தங்க நகை மாளிகை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார்.

2017ல் ‘நான்சென்ஸ்’ என்ற மலையாள படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். இவருக்கு தமிழ் திரையுலகில் திருப்புமுனையாக அமைந்தது 90ml திரைப்படம்தான். 2019ல் வெளியான இந்த படத்தில் ஓவியாவின் தோழிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அதில் நடித்த கேரக்டர்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரைக்குள் நுழைந்தார். மலையாள சீரியலில் நடித்தார்.

முதன் முதலில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘உயிரே’ சீரியலில் என்ட்ரி ஆனார். அந்த தொடரின் மெயின் லீடு மனிஷாஜித் விலகியதால் ஸ்ரீகோபிகா நடித்தார். அவர் நடித்த பவித்ரா கேரக்டருக்கு நல்ல ரீச் கிடைத்தது. அதன் பிறகு சன்டிவியின் சுந்தரி சீரியலில் அனு கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கார்த்திக்கு இரண்டாவது மனைவியாக இவர் நடித்து வருகிறார். ஹீரோ மீது பாசத்தை பொழிந்து ரொம்ப பொசசிவ், கேரிங் ஆக நடிக்கிறார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

ஸ்ரீகோபிகா ஒரு பேட்மிண்டன் ப்ளேயர். பாக்சரும் கூட. மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சினிமாவில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது இவரது விருப்பம். சீரியலில் கலக்கும் ஸ்ரீகோபிகாவை விரைவில் மீண்டும் வெள்ளித்திரையில் பார்க்கலாம்..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sundari serial anu actress shreegopika neelnath biography

Next Story
அண்ணாமலை, அருணாச்சலம் படங்கள், புத்தகம் – பிக் பாஸ் அர்ச்சனாவின் குணமாகும் நாட்கள்!Bigg Boss Archana healing days viral video Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com