சன்மியூசிக் வி.ஜே. ராகேஷ் ஐஇ ஃபேஸ்புக் நேரலையில் உரையாடல்

ட்ரிப் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள ராகேஷை இனி வெள்ளித்திரையிலும் அதிகம் காண விருப்பம் தெரிவித்துள்ளனர் அவருடைய ரசிகர்கள். 

ட்ரிப் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள ராகேஷை இனி வெள்ளித்திரையிலும் அதிகம் காண விருப்பம் தெரிவித்துள்ளனர் அவருடைய ரசிகர்கள். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sunmusic VJ Rakesh KM IE Tamil FB Live exclusive

Sunmusic VJ Rakesh KM IE Tamil FB Live exclusive

Sunmusic VJ Rakesh KM IE Tamil FB Live exclusive : ஒரு பெரிய கனவுடன் பயணிக்கும் பலருக்கும் அவர்களின் இலக்கினை அடைவதில் நிறைய தடைகள் இருக்கும். தடைகளை உடைத்து தன்னுடைய இலக்கை அடையும் நபர்களையே உலகம் கொண்டாடுகிறது. கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே, நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்தி வந்தவர் தான் கோவையை சேர்ந்த ராகேஷ்.

Advertisment

கல்லூரி முடித்ததும் அவ்வளவு எளிமையாக சன்மியூசிக் வி.ஜேவுக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறும் ராகேஷ், ஆரம்பத்தில் கோவையில் இயங்கி வந்த உள்ளூர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ரியல் எஸ்டேட் விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார்.  பிறகு பெப்பர்ஸ் டிவியில் சிறிது காலம் தொகுப்பாளராக பணியாற்றினார்.

Advertisment
Advertisements

கடந்த இரண்டு வருடங்களாக சன்மியூசிக்கில் பணியாற்றி வரும் ராகேஷை இன்று தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சன்மியூசிக்கின் அசைக்க முடியாத அடையாளமாக மாறிவிட்ட வி.ஜேக்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி சன் டிவி நிகழ்ச்சிகளிலும், சன் சிங்கரிலும் தொகுப்பாளராக இருந்த ராகேஷ் வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். ட்ரிப் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள ராகேஷை இனி வெள்ளித்திரையிலும் அதிகம் காண விருப்பம் தெரிவித்துள்ளனர் அவருடைய ரசிகர்கள்.

இந்த லாக்டவுன் காலத்தில் தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் வாசகர்களுடன் உரையாடி, தன்னுடைய துறைசார் பயணம் குறித்து வாசகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த வரிசையில் இன்று வி.ஜே. ராகேஷ் நம்முடன் முகநூல் நேரலையில் இணைகிறார். அவருடன் உரையாட நீங்கள் இன்று மாலை சரியாக 06:00 மணிக்கு எங்களின் அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கமான https://www.facebook.com/IETamil/ - ல் இணைந்திருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Ie Tamil Facebook Live

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: