Sunscreen zinc oxide effects skin study Tamil News : தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், ஒரு புதிய ஆய்வு, சில சேர்க்கைகளில், சன்ஸ்கிரீன்கள் சருமத்தில் தீங்கு விளைவிக்கும் என்று கண்டறிந்துள்ளது.
ஃபோட்டோகெமிக்கல் மற்றும் ஃபோட்டோபயாலஜிக்கல் சயின்சஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், ஜிங்க் ஆக்சைடு கொண்ட சன்ஸ்கிரீன்கள், சூரிய ஒளியில் இரண்டு மணி நேரம் கழித்து அதன் செயல்திறனை இழக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டது. பெரும்பாலான சன்ஸ்கிரீன்களில் இருக்கும் மற்ற இரசாயனங்களுடன் இணைந்தால் அவை அபாயகரமானதாக மாறக்கூடும்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஜிங்க் ஆக்சைடு மற்ற கரிம சன்ஸ்கிரீன்களுக்கு அடியில் அல்லது மேலே பயன்படுத்தப்படும்போது, அது ஒரு தயாரிப்புடன் ஒப்பிடும்போது அதிக UV கதிர்வீச்சை வடிகட்டாது. இந்த கலவை, கரிம புற ஊதா வடிப்பான்களை சிதைக்கிறது. இதனால், செயல்திறனைக் குறைப்பது மட்டுமல்லாமல், அபாயகரமான துணை தயாரிப்புகளையும் உருவாக்குகிறது.
இந்த ஆய்வுக்காக, சன்ஸ்கிரீனில் செயலில் உள்ள சேர்மங்கள் மற்றும் ஜிங்க் ஆக்சைடு கொண்ட பிற லோஷன்கள் உட்பட ஐந்து சேர்க்கைகளை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தனர். ஒளி நிலைத்தன்மை மற்றும் ஒளி நச்சுத்தன்மை ஆகியவற்றில் இரண்டு குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கவனிக்கப்பட்டன. ரசாயனம், இரண்டு மணி நேரம் சூரிய ஒளியில் மட்டுமே அபாயகரமானதாகக் காட்டப்பட்டது. சன்ஸ்கிரீன் சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கும் போது, அது ஒருவரை மேலும் கதிர்வீச்சுக்கு வெளிப்படுத்துகிறது. இது சூரிய ஒளி எரிச்சல், கொப்புளங்கள் அல்லது சூரிய நச்சுக்கு வழிவகுக்கும்.
இந்த ஆய்வைப் பற்றி கருத்து தெரிவித்த மணிப்பால் மருத்துவமனையில் சரும மருத்துவ ஆலோசகராக பணிபுரியும் டாக்டர் சசித் ஆபிரகாம், “ஆய்வின் படி, பல பொருட்களை ஒன்றாகப் பயன்படுத்துவது சிக்கல்களை ஏற்படுத்துகிறது. பிரச்சனைகளை உருவாக்க மருந்துகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளலாம். ஜிங்க் ஆக்சைடு அல்லது டைட்டானியம் டை ஆக்சைடு அல்லது மற்ற சன்ஸ்கிரீன் ஏஜெண்டுகள் போன்ற ஒரு மூலப்பொருளை மட்டுப்படுத்தப்பட்ட கலவையில் பயன்படுத்துவது பக்க விளைவுகளின் அபாயத்தைத் தணிக்கலாம்" என்று indianexpress.com-யிடம் கூறினார்.
மேலும், "கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த மேலும் சீரற்ற கட்டுப்பாட்டு ஆய்வுகள் தேவை. இந்த ஆய்வைப் பார்த்த பிறகு நாம் எச்சரிக்கையான அணுகுமுறையை எடுக்க வேண்டும். ஆனால், அது மனிதர்களிடமும் உள்ள மேலதிக ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்றும் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil