கிளாசிக்கல் டான்ஸர்… அட்வகேட் ஆசை… இப்போ ‘அன்பே வா’ பூமிகா..! டெல்னா லைஃப் ட்ராவல்

Sun TV Serial News: டெல்னாவுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும்போதே லாயர் ஆக வேண்டும் என்பதுதான் கனவு.

Tamil Serial News: சன் டிவியின் ‘அன்பே வா’ சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளவர் திரைப்பட நடிகை டெல்னா டேவிஸ். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர். இவர் அடிப்படையில் ஒரு கிளாசிக்கல் டான்சர். இவருடைய நடன ஆசிரியரின் நண்பரான இயக்குநர் ஒருவர் டெல்னாவை போட்டோ ஷூட் பண்ண சொல்லி இருக்கிறார். இதைதொடர்ந்து, பிரபல ஃபேஷன் போட்டோகிராபரை வைத்து கொச்சியில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். பிறகு சென்னையிலிருந்து காஸ்டிங்கிற்காக கேரளா வந்தவர்களிடம் டெல்னா புகைப்படங்களை காட்ட அதன் மூலம் வந்த வாய்ப்பு தான் விடியும்வரை பேசு படம்.அப்போது அவருக்கு வயது 17.

நடிகையாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லாத டெல்னா ஒரு ட்ரிப் மாதிரி சென்னை வந்துள்ளார். முதல் படம் முடிந்த பிறகு அந்த படத்தின் அசோசியேட் டைரக்டர் மூலமாக அடுத்து ‘49ஓ’ படத்தில் நடிகர் கவுண்டமணி மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து பட்ற, நனையாத மழையே, ஆக்கம் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருப்பதோடு, ‘யூ டூ புரூட்டஸ்’, ‘ஹேப்பி வெட்டிங்’ போன்ற மலையாளப் படங்களிலும் நடித்தார். தொடர்ந்து தமிழில் படங்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் அவருக்கான ஓர் அடையாளம் கொடுத்தது ‘குரங்கு பொம்மை” தான்.

படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் அந்த நேரத்தில் கல்லூரியிலும் படித்துக்கொண்டிருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அதிக விடுப்பு எடுப்பதால் கல்லூரியில் பிரச்சனை ஆனபோது நடிப்பை தள்ளிவைத்துவிட்டு படிப்பை தொடர்ந்துள்ளார். டெல்னாவுக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. 10 ஆம் வகுப்பு படிக்கும்போதே lawyer என்பது டெல்னாவின் கனவாக இருந்துள்ளது. அதனால்தான் கல்லூரி படிப்பில் English literature with Journalism துறையை தேர்வு செய்துள்ளார். இளங்கலை பட்டம் முடித்து ஒரு வருடம் கேரளாவில் மாடலிங் செய்துகொண்டிருந்தார். அதன்பிறகு பெங்களூருவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எல்எல்பி படித்து வருகிறார்.

படிப்பில் கவனம் செலுத்தியதால் நடிப்பை ஒத்திவைத்திருந்த டெல்னாவை கொரோனா மீண்டும் நடிப்புக்குள் வர வைத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக யுனிவர்சிட்டி மூடியதால் கேரளா திரும்பிய அவர் ஆறு மாதங்கள் வீட்டில் இருந்துள்ளார். பிறகு மறுபடியும் மாடலிங் செய்ய ஆரம்பித்துள்ளார். அப்போது தான் அன்பே வா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கதவை தட்டியுள்ளது.இந்த சீரியலில் இவர் நடித்து வரும் பூமிகா கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். இவருக்கு ஜோடியாக விராட் என்பவர் இந்த தொடரில் நடித்து வருகிறார். சீரியல் ஆரம்பித்து சில மாதங்களிலேயே நிறைய ஃபேன்ஸ் பேஜஸ், நிறைய ஃபாலோவர்ஸ். ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு நல்ல டிஆர்பி வருகிறது.

டெல்னா நிஜத்திலும் பூமிகா கேரக்டர் போல்தான். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வா இருக்கும் இவர் ரசிகர்களின் கமெண்டுகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பாராம். அனைத்தையும் படித்து பார்ப்பாராம். பெரிய திரையில் தனக்கு கிடைக்காத அங்கீகாரம் சின்னத்திரை மூலமாக சாத்தியமாகி இருப்பதாக சந்தோஷமடைகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv anbe vaa serial actress bhoomika biography

Next Story
லெமன் அல்லது மிளகாய்… வீட்டில் சூப்பரான கெட்டித் தயிர் இப்படி தயார் பண்ணுங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com