ஐடி.. விஜே.. இப்போ சீரியல் வில்லி… சங்கீதாவின் லைப் ட்ராவல்..

anbe va serial update: சீரியல் நடிகை ஆன பிறகு ஆங்கரிங்கை ரொம்ப மிஸ் பண்ணும் விஜே சங்கீதா.

சன்டிவியின் அன்பே வா சீரியலில் நெகட்டிவ் ரோலில் கலக்கி வரும் அஞ்சலிக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். இவரது நிஜ பெயர் சங்கீதா. சன் மியூசிக்கில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் வி ஜே சங்கீதா. மதுரையில் பிறந்து வளர்ந்தவர் அங்கேயே கல்லூரி படிப்பை முடித்தார். ஐடி வேலைக்காக சென்னை வந்துள்ளார்.அதன்பிறகு ஆங்கரிங் ஆசையில் ஐடி துறையை விட்டு மீடியாவில் நுழைந்தார். சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த தொலைக்காட்சியில் செந்தமிழ் பெண்ணே, பிறந்தநாள் வாழ்த்துக்கள்,24ப்ரேம்ஸ், பிராங்கா சொல்லட்டா மற்றும் லேடீஸ் சாய்ஸ் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலம் ஆனார். அதுமட்டுமல்ல இவர் செய்திகளில் வானிலை வாசிப்பவராக பணியாற்றியிருந்தார். இது ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்த நிகழ்ச்சியாக இருந்தது.

பிறகு வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போதுதான் அழகு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சீரியலுக்கு அழைப்பு வர, பூர்ணாவாக சின்னத்திரைக்குள் எண்ட்ரி கொடுத்தார் சங்கீதா. அழகு நாடகத்தில், தமிழ் சீரியல் ரசிகர்களே பிரமிக்கும் வகையில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்த சீரியலில் முதலில் இவர் நல்ல பாஸிட்டிவ் கேரக்டரில் நடித்து பின்பு வில்லி கேரக்டருக்கு மாறியவர். இது இவருக்கு முதலில் பிடிக்கவில்லை என்றாலும் விருப்பம் இல்லாமல் தான் இதில் நடிக்க ஆரம்பித்தார். இருந்தாலும் பெரிய அளவில் அந்த கேரக்டர் ரீச் ஆனது.

இந்த சீரியலில் வில்லியாக நடித்து சிறந்த வில்லி என்று சன் குடும்ப விருதும் வாங்கி இருக்கிறார். இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பால் ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் உருவான டிக் டிக் டிக் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் கால்பதித்தார். 700 எபிசோடுகளை கடந்து நன்றாக சென்று கொண்டிருந்த அழகு சீரியல் கொரோனா பிரச்சனையால் ட்ராப் ஆனது. இதையடுத்து திரிஷா நடிப்பில் ஓடிடி தளங்களில் வெளியான ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தில் சங்கீதா முக்கிய கதாபாத்திரத்திக் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அன்பே வா சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார் சங்கீதா. அதிலும் வில்லி ரோல் தான். அஞ்சலி கேரக்டரில் பயங்கர வில்லத்தனமாக நடித்து வருகிறார்.

பாசிட்டிவ் ரோல் அளவிற்கு நெகட்டிவ் ரோலுக்கும் ரசிர்களிடையே வரவேற்பு கிடைத்ததால் இதிலும் அதையே தேர்ந்தெடுத்துள்ளார். இந்த சீரியலிலும் அவரது நடிப்பிற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் வரவேற்புகள். டிஆர்பியில் முன்னணி உள்ள இந்த தொடரில் விராட் கதாநாயகனாகவும் டெல்னா டெவிஸ் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இந்த தொடரில் ரேஷ்மாவின் தங்கை அஞ்சலியாக சங்கீதா நடிக்கிறார். சங்கீதாவுக்கு எமோஷனல்,ரொமன்ஸ் லாம் ரியல் லைப், ரீல் லைப் ரெண்டுத்துலயும் வராதாம். எப்பவும் கலகலனு ஹப்பியா இருப்பாராம். விருப்பப்பட்டு விஜே ஆனவர் நடிக்க வந்த பிறகு ஆங்கரிங்கை ரொம்பவே மிஸ் பண்ணுகிறாராம். வீட்டில் இரண்டு நாய்களை வளர்க்கும் சங்கீதா, அவற்றுடன் தான் நிறைய நேரத்தை செலவிடுவாராம்.

சமூக வலைதளங்களில் சங்கீதாவிற்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் பேஜ். சினிமாவில் வில்லி கேரக்டர்னாலும் நடிக்க ரெடியாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv anbe vaa serial anjali vj sangeetha biography

Next Story
பயறு முதல் பாகற்காய் வரை… மாடித்தோட்ட ரகசியம் கூறுகிறார் மோகன்லால்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X