சன்டிவியின் முன்னணி சீரியலான அன்போ வா தொடரில் ஹீரோ வருணின் அம்மாவாக நடித்து வில்லத்தனம் செய்து வருபவர் பார்வதி. இவரது நிஜப்பெயர் கன்யா பாரதி. கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்தவர். இவர் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது உறவினர் ஒருவர் நடத்திய டிராமாவில் வரவேண்டிய நடிகை வராததால் இவரை நடிக்க வைத்துள்ளனர். இதன் மூலம் தான் திரைத்துறை அறிமுகம். சிறப்பாக நடித்தவருக்கு தூர்தஷனின் டெலிஃபிலிமில் நடிப்பதற்கு சான்ஸ் கிடைத்துள்ளது. இதன் மூலம் பாப்புலரானவர் நங்கூரம் என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு 50க்கும் மேற்பட்ட படங்களில் கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறார்.
Advertisment
இவர் 2004ல் மலையாளத்தில் மானசி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதில் மீராவாக நடித்திருந்தது நல்ல வரவேற்பை கொடுத்தது. ராதிகாவின் செல்லமே தொடர்தான் தமிழ் ரசிகர்களின் மனதில் கன்யாவிற்கு ஒரு இடம் கொடுத்தது. முதலில் காவ்யாஞ்சலி தொடரில் அமைதியான அஞ்சிலியாக நடித்த கன்யா அதன்பிறகு நடித்த செல்லமே, மீரா, வள்ளி, தெய்வம் தந்த வீடு ஆகிய தொடர்களில் பயங்கர வில்லியாக நடித்தார். அதுவும் செல்லமே தொடரில் எப்பொழுதும் மதுபாட்டிலும் கையுமாக இருந்து கணவரை திட்டிக்குவித்த மதுமிதாவாக நடித்தார். வள்ளி தொடரில் அலட்டல் மாமியார், தெய்வம் தந்த வீடு தொடரில் சம்பந்தி வீட்டு குடும்பத்தை கெடுக்கும் கதாபாத்திரம் என ரசிகர்களிடம் ஸ்கோர் செய்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சன்டிவியின் அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார். பூமிகாவை கொடுமைப்படுத்தும் மாமியாராக நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். இதுவரை 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் கன்யா. ஏசியாநெட் சேனலில் பிரபலமான சந்தனமழா தொடரில் நடித்தற்காக 2014ல் சிறந்த வில்லிக்கான விருது வழங்கப்பட்டது. பிறகு 2015ல் தெய்வம் தந்த வீடு சீரியலுக்காக விஜய் டிவியின் சிறந்த வில்லிக்கான விருது வழங்கப்பட்டது. மலேசியாவில் நடைபெற்ற சீக்கா நிகழ்ச்சியில் பெஸ்ட் கேரக்டர் ஆர்டிஸ்ட் விருதும் வாங்கியுள்ளார்.
கன்யா இயக்குநரும் நடிகருமான கவிதா பாரதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய ஆடைகளை அவரே டிசைன் செய்து கொள்வாராம். இவரது தனித்துவமே வித விதமான உடைகள், நகைகள் அணிந்து கொண்டு நடிப்பதுதான். கன்யாவை பார்க்கும் பலரும் அவரிடம் கேட்பது ஆடைகள் பற்றிதான். கன்யாவின் மகள் நிலாவிற்கு இவர் சேலை உடுத்துவதுதான் மிகவும் பிடிக்குமாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil