scorecardresearch

10 வயதில் சின்னத்திரை அறிமுகம்… ஷார்ட் பிலிம், மூவி.. பாக்கியலட்சுமி இனியா சக்சஸ் ஸ்டோரி…

vijaytv serial news: சிபிராஜ் நடிப்பில், ’ஜாக்சன் துரை’, ஆர்யா நடிப்பில் ‘யட்சன்’ ஆகியப் படங்களிலும் நடித்துள்ளார் நேஹா.

Pandian Stores Chithi 2 fame Nehah Menon Mother gives birth to a baby girl Tamil News

தமிழ் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிசியான நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் நேஹா மேனன். தற்போது அவருக்கு வயது 19. கேரள மாநிலம் சாலக்குடியை பூர்வீகமாக கொண்ட இவர், வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். தற்போது கல்லூரி படித்து வருகிறார். தமிழ் சின்னத்திரையில் பைரவி என்ற சீரியலின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பின்னர், பிள்ளை நிலா, நிறம் மாறாத பூக்கள், தமிழ்செல்வி தொடரில் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது வாணி ராணி தொடர் தான்.

கடந்த 2013ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும்பாலான இல்லத்தரசிகளின் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று நிறைவுற்ற தொடர் வாணி ராணி. இதில் ராதிகாவின் மகளாக தேனு என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். ஐந்து வருடங்கள் ஓடியது இந்து தொடர்.தி எல்லோ பெஸ்டிவல் என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். இந்த குறும்படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. சீரியல் மட்டுமல்லாது திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016ம் ஆண்டு இவர் நாரதன் என்ற படத்தில் நடித்தார். நாக வெங்கடேஷ் என்பவர்தான் இதை இயக்கினார்.

பிறகு சிபிராஜ் நடிப்பில், ’ஜாக்சன் துரை’, ஆர்யா நடிப்பில் ‘யட்சன்’ ஆகியப் படங்களிலும் நடித்துள்ளார். லாக்டவுனால் நடிப்பிலிருந்து விலகி இருந்தவர் தற்போது இரண்டு முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார். சன்டிவியின் ஹிட் சீரியலான சித்தி 2வில் ராதிகாவின் மகளாக நடிக்க தொடங்கினார். அதேபோல் விஜய்டிவியின் டாப் சீரியலான பாக்கியலட்சுமியிலும் பாக்யாவின் மகளாக இனியா கேரக்டரில் நடிக்கிறார். இரண்டிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களை போஸ்ட் பண்ணி வருகிறார். பெயிண்டிங் உள்ளிட்ட கை வேலைப்பாடுகளை தனது அம்மாவுடன் இணைந்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கிராஃப்ட்ஸ் சம்பந்தமான ஒர்க்ஷாப்களிலும் அம்மாவும் மகளும் தவறாமல் கலந்துக் கொள்கிறார்கள். இவருக்கு பிடித்த நடிகர் சிவகார்த்திக்கேயன். சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு போனவர் என்பதால் அவரை ரொம்பவும் பிடிக்குமாம். வெள்ளித்திரையில் வாய்ப்பை எதிர்நோக்கி நடித்து வருகிறார் நேஹா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Suntv chithi2 vijaytv baakiyalakshmi serial actress iniya neha menon biography