சின்னத்திரையில் அழகான வில்லியாக அசத்தி வருகிறார் தர்ஷனா ஸ்ரீபால் கோலசா. சன்டிவியின் சித்தி2 தொடரில் யாழினி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். தொடக்கத்தில் நவீனை உருகி உருகி காதலித்து வந்த யாழினி இப்போது கதையின் வில்லியாக மாறி மிரட்டுகிறார். வில்லியான பிறகு யாழினிக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். வட இந்தியாவை சேர்ந்த இவர் தொகுப்பாளினியாக இருந்து, சீரியல் நடிகையானவர். திருச்சியில் தான் படித்து வளர்ந்துள்ளார். ஃபேஷன் டிசைனிங் முடித்துள்ள இவருக்கு டிசைனர் ஆகவேண்டும் என்பதே கனவு.
4 வருடங்களுக்கு முன்பு ஃபேஷன் டிசைனிங்க்காக சென்னை வந்தவர் பல நிறுவனங்களில் வேலை செய்துள்ளார். சன்டிவியில் ஸ்டைலிஷ் டிசைனர் ஆக நினைத்து விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு காம்பியரிங் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது தான் தர்ஷனாவிடம் ஆதித்யா சேனலில் ஆன்கரிங் செய்ய சொல்லி கேட்டுள்ளனர். மறுக்காமல் முயற்சி செய்யலாம் என நினைத்த தர்ஷனா “சிரித்திடு சீசே” என்ற லைவ் ஷோவில் ஆன்கராக இருந்து வந்துள்ளார். அந்த ஷோவிற்கு நல்ல ரீச் இருந்தது. வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தின் புரொமோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
சன்டிவியில் சித்தி2 சீரியலில் நடிக்க தர்ஷனாவிற்கு சான்ஸ் கிடைத்தது. அதுவும் ராதிகாவின் மகளாக. உடனே ஓகே சொல்லி சின்னத்திரையில் என்ட்ரி ஆனார். தர்ஷனாவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் தான் ரோல் மாடல். அவரை போல் வாழ்க்கையில் தனித்துவமா இருக்கனும் தான் ஆசையாம். எப்போதும் யூடியூபில் சென்று தன்னுடைய சீரியல் வீடியோக்களுக்கு வரும் கமெண்ட்ஸ் அனைத்தையும் படித்து பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். தர்ஷானாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய்.
தற்போது விஜய் டிவியின் தமிழும் சரவஸ்தியும் சீரியலிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாழினி ஸ்டைலாக மாடர்ன் உடையில் புகைப்படங்கள பதிவிடுகிறார். கலாட்டா உமேன் ஐக்கான் 2021 க்கான ” Favorite serial villi” விருது வாங்கியுள்ளார். சீரியல் வில்லிக்கு சினிமா சான்ஸ் கிடைத்தாலும் நடிக்க ஆர்வமுடன் உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil