சன்டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் மகராசி. இதில் செண்பகம் கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார் சினிமா நடிகை ஸ்ரீரஞ்சனி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பைதான். 20வயதில் டிவி விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார். அதைப்பார்த்த கே.பாலச்சந்தர் 'காசளவு நேசம்' டிவி தொடரில் நடிக்க வாய்ப்பு வழங்கியுள்ளார்.
Advertisment
ஆரம்பத்தில் சினிமாவில் ஆர்வம் இல்லாமல் நடிக்க வந்தவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதன் மூலம் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படத்தில் மாதவனின் அண்ணியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மூன்று படங்களில் மாதவனுடன் நடித்திருந்தார். தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகம் ரீச் ஆனது அந்நியன் படத்தில் நடிகை சதாவின் அம்மாவாக நடித்தபோதுதான். அதன்பிறகு தொடர்ச்சியாக அம்மா, அண்ணி, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.
Advertisment
Advertisements
விஜய், அஜித், சிம்பு, விஷால் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். செல்லமே, பிரியசகி, ABCD, திமிரு, போக்கிரி படத்தில் விஜய்யுடன், மொழி, தொட்டால் பூ மலரும், அபியும் நானும், பிரிவோம் சந்திப்போம், சர்வம், என்றென்றும் புன்னகை, காதலில் சொதப்புவது எப்படி, நீதானே எந்தன் பொன்வசந்தம், சிங்கம் 2, வருத்தப்படாத வாலிபர் சங்கம், நிமிர்ந்து நில், நண்பேண்டா, மாரி, தனி ஒருவன், வாலு, வேதாளம், பெங்களூரு நாட்கள், சீமராஜா, அடங்கமறு, நாடோடிகள் 2 லேட்டஸ்டாக கால்ஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். ஆடை படத்தில் அமலாபாலிற்கு அம்மாவாக நடித்திருந்தார். ஹவுஸ் ஓனர் படத்தில் ராதாவாக வாழ்ந்திருக்கிறார். விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத் தமிழன் படத்தில் நாசரின் தங்கையாக நடித்துள்ளார். இதுவரை தமிழில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தவர் தற்போது சன்டிவி சீரியலில் என்ட்ரி ஆகி நடித்து வருகிறார். லாக்டவுனில் இந்த சீரியலில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. தற்போது செண்பகம் சிதம்பரமாக பாசமான அம்மாவாக கலக்கி வருகிறார்.
ஸ்ரீரஞ்சனி தடகள போட்டியில் ஜூனியர் லெவலில் நேஷனல் சேம்பியன். ஹாக்கி பிளேயரும் கூட. திருமணத்திற்கு பிறகு விளையாட்டில் இருந்து ஒதுங்கியுள்ளார். இவருக்கு தமிழ் கலாச்சார மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் மடிசார் கட்டுவது அவ்வளவு பிடிக்குமாம். அதனாலேயே அந்நியன் படத்தில் விரும்பி நடித்தாராம். சினிமா, சீரியல் எதுவாக இருந்தாலும் குடும்ப உறவுகளின் முக்கிய குணசித்திர வேடத்தில் நடிப்பதை அதிகம் விரும்புவாராம் ஸ்ரீரஞ்சனி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil