சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் அபியும் நானும். இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வித்தியா வினு மோகன். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம். இவர் ஒரு மலையாள நடிகை. அப்பா வங்கி அதிகாரி. சிறு வயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த இவர், முதலில் விளம்பரப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் சினிமாவில் நடிக்க தொடங்கினார். மலையாளத்தில் முதன்முதலாக சீதா கல்யாணம் படத்தில் நடித்தார். அதன் பிறகு வரிசையாக ஏராளமான படங்கள் நடித்தார். “பரயன் மரன்னத்து,” “நீலாம்பரி,” “செரிய கள்ளனும் வல்லிய போலீசும்,” “மகாராஜா டாக்கீஸ்,” “எம்.எல்.ஏ. மணி: பத்தாம் கிளாசும் குஸ்தியும்,” “ஈ திறக்கினிடையில்,” “ஸ்வப்ன மல்லிகா,” “பெல்லரி ராஜா,” “ரெட் அலர்ட்,” “கால் சிலம்பு” போன்ற மலையாள படங்களில் நடித்தார்.

இவை தவிர “ப்ரியா,” “சமகமா” போன்ற கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.பிறகு “ஆறாவது வனம்,” “நேர் எதிர்,” “கருவறை,” “காதல் பாதை,” “அகிலன்” ஆகிய தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வித்யாவுக்கு பெரிய ரீச் கொடுத்தது சின்னத்திரை தான். மழவில் மனோரமா டிவியில் ஒளிபரப்பான “எண்டே பொண்ணு” என்கிற மலையாள சீரியலில் நடித்திருந்தார். இவரது கணவர் வினு மோகனும் ஒரு நடிகர்தான். இவர்கள் இருவரும் “நிவேதயம்” என்ற மலையாள படத்தில் இணைந்து நடிக்க, காதல் மலர்ந்து வாழ்க்கையிலும் இணைந்து விட்டனர்.

தமிழில் இவர் சன்டிவியின் வள்ளி சீரியலில் நடித்து தமிழக மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றார். வள்ளி சீரியல் பேன்ஸாக இல்லாதவர்கள் இருக்க முடியாது என்கிற அளவுக்கு அந்த தொடர் பிரபலமான ஒன்று. ஆயிரத்திற்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஓடிய அந்த தொடரில் வள்ளி மற்றும் வெண்ணிலா என்ற இரட்டை கதாபாத்திரத்தில் அசத்தி வந்தவர் வித்யா மோகன். கேரளாவிலிருந்து தமிழகம் வந்த தொடரில் நடித்துக்கொண்டிருந்தார்.

தற்போது அபியும் நானும் தொடரில் மீனா என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார். மீனா மற்றும் சிவாவின் மகனான முகில் குறும்புக்காரர் மற்றும் அவரது பாட்டி ராஜேஸ்வரியின் செல்ல பேரனும் ஆவான். அபி ஒரு மென்மையான இயல்புடைய பெண். தனது தந்தையின் பணி நிமித்தமாக முகிலன் வீட்டிற்கு வரும் அபியை சிறிதும் விரும்பாத முகிலன். அவளை தனது எதிரி என்று நினைக்கிறான். அபி முகிலுடன் நண்பனாக முயற்சிக்கிறாள். இந்த தொடரின் கதை அபி மற்றும் முகில் என்ற இரண்டு குழந்தைகளைச் சுற்றியும் மீனாவின் கடந்தகால மர்மத்தை சுற்றியும் நகர்கின்றது. அழகான அம்மாவாக கலக்கி வருகிறார் மீனா. நடிப்பை தாண்டி இவர் ஒரு டான்ஸர் மற்றும் மாடலும் கூட.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தெறிக்க விட்டு வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”