சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியலில் வில்லியா நடித்து வருபவர் கிரிஜா. இவரது நிஜப்பெயர் அகிலா. சென்னையை சேர்ந்த இவர் 2005ஆம் ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது நடிக்க வந்தவர். சன்டிவியில் ஆன்கராக இருந்தவர் செல்வி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் மலர்கள், ரோஜாக்கூட்டம், சிவசக்தி, கோலங்கள், திருமதி செல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள், கல்யாண பரிசு, சக்தி, அழகு, முந்தாணை முடிச்சு,அஞ்சலி, அபூர்வ ராகங்கள், அருந்ததி, முள்ளும் மலரும் போன்ற பல சீரியல்களில் பாசிட்டிவ் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து மக்களிடையே ரீச் ஆனவர் அகிலா. ஜெயா டிவி, விஜய் டிவி, ஜி தமிழ் தொலைக்காட்சிகளில் 40க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
Advertisment
சன்டிவியில் கிட்டதட்ட 15 வருடங்களாக சீரியல்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் இவரது முதல் படம் சிம்பு, ஜோதிகா நடித்த சரவணா. பிறகு பொல்லாதவன், பிள்ளையார் தெரு கடைசி வீடு, அரசாங்கம், திருவண்ணாமலை, மனதோடு மழைக்காலம், கண்ணும் கண்ணும்,அரண்மனை, வேதா போன்ற பல படங்களில் தங்கை கேரக்டர், துணை நடிகையாக நடித்துள்ளார். தனுஷ், சிம்பு, சூர்யா, விஜயகாந்த், அர்ஜூன், சுந்தர்.சி. போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். அதிலும் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் ரயில்வே ஸ்டேஷன் சீனை யாரும் மறக்க முடியாது. திரைப்படங்கள் சீரியல்கள் என பிசியாக நடித்துக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்திற்கு பின் சீரியலில் மட்டும் நடித்து வந்தார்.
ஐடியா செல்லர் எனும் புரொடக்ஷன் கம்பெனி மூலம் சில நிகழ்ச்சிகளை புரொடியூஸ் செய்தார். தேனருவி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டுள்ளார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான கோர்ஸ் படித்து நடிப்பில் இருந்து விலகி வேறு பணி செய்யலாம் என நினைத்துக்கொண்டிருந்த வேளையில்தான் அபியும் நானும் சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது அதில் வில்லியாக கலக்கி வருகிறார் கிரிஜா.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அகிலா அவ்வபோது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். இவரது காஸ்டியூமிற்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சீரியல் இயக்குநர் பிரதாப் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சீரியல்களில் கமிட் ஆனதால் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை. நேரம் கிடைக்கும்போதும் நல்ல கேரக்டர்கள் அமையும்போதும் கண்டிப்பாக சினிமாவிலும் நடிக்க ஆவலாக உள்ளதாக கூறுகிறார் அகிலா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil